ஒரு இரவுக்கு ரூ.20 ஆயிரம் தருகிறேன் என்றதும் பறந்து வந்த பெண் -விடிய விடிய அனுபவித்துவிட்டு இருந்ததையும் பிடுங்கிக்கொண்டு ஓடிய ரவுடிகள்

 
xz

ஒரு இரவுக்கு 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னதும் விமானத்தில் பறந்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.  விடிய விடிய 3 பேர் அனுபவித்துவிட்டு விடிந்ததும் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி இருந்ததையும் பிடுங்கிக் கொண்டு ஓடிய ரவுடிகளை பிடித்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 25 வயதான இந்த இளைஞர் டேட்டிங் ஆப் மூலம் மும்பையில் இருக்கும் பெண்ணிடம் பேசி வந்திருக்கிறார். ஒரு இரவுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார். 

 இளைஞரின் பேச்சை நம்பிய அந்த மும்பை பெண்ணும் விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றவர்,  அங்கு சொகுசு  விடுதியில் தங்க வைத்திருக்கிறார் .  

bx

ராஜேஷ் மட்டுமல்லாது அவரது நண்பர்கள் தீனதயாளன் , விஸ்வநாதன் ஆகியோரும் அந்தப் பெண்ணுடன் மது அருந்திவிட்டு பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  மது அருந்திக்கொண்டே விடிய விடிய மூன்று பேரும் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள். 

 விடிந்ததும் மும்பை செல்ல வேண்டும் என்றும் , பேசிய பணத்தை தரும்படியும் அந்த பெண் கேட்டிருக்கிறார்.   உடனே மூன்று பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி.  அந்த பெண்ணின் கையிலிருந்த செல்போனையும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கிறார்.

ar

 மும்பையில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு கையில் பணமும் இல்லாமல்,  செல்போனும் இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து இருக்கிறார். பின்னர் மாமல்லபுரம் போலீசிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.  சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.  இதில் ராஜேஷ் ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்று தெரியவந்திருக்கிறது.  மூன்று பேருமே கொலை குற்றவாளிகள் தான் என்பதையும் கண்டறிந்த போலீஸார் அந்த மூன்று பேரையும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.