திடீரென்று நிறுத்திவிட்டதால் பெண் சரமாரியாக குத்திக்கொலை

 
ஹ்

கள்ளஉறவை திடீரென்று  கைவிட்டதால் பெண்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில்  மைசூரு மாவட்டத்தில்  நஞ்சன்கூடு தாலுகா அம்பாப்புரா கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்தவர் மினுக்கம்மா ( 45). அவரது மகன் பிரகாஷ்.  கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளார்.   ஹனேபுரா கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மகாதேவ நாயக் (50).

க்க்

மினுக்கம்மாக்கும் மகாதேவ நாயக்கிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது.  இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்திருக்கிறது.   இதையடுத்து  மினுக்கம்மா, மகாதேவநாயக்கிடம் பேசுவதை நிறுத்தி கொண்டிருக்கிறார். இதனால் இரு குடும்பத்தினருக்கு  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ம்போலீசில் புகார் சென்று, போலீசாரும்  இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பிரச்சனையினால்  மகாதேவ நாயக் உடனான கள்ள உறவை துண்டித்திருக்கிறார் மினுக்கம்மா.  இதனால்  அவர் மீது மகாதேவநாயக் கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.    அவரை கொலை செய்யவும் ஆவேசப்பட்டிருக்கிறார். 

 சம்பவத்தன்று மினுக்கம்மா அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மகாதேவநாயக், மினுக்கம்மாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மகாதேவநாயக்,  மறைத்து வைத்திருந்த கத்தியால் மினுக்கம்மாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மினுக்கம்மா, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மினுக்கம்மா உயிரிழந்ததும் மகாதேவநாயக் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.  தகவல் அறிந்ததும்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  மினுக்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலவந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவநாயக்கை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.