காதலித்த பெண் திருமணத்துக்கு மறுத்ததால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை!

 
rape

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம், கில்லா கணபுரம் மண்டலம், மானாஜிபேட்டையில் காதலித்த இளம்பெண், திருமணம் செய்ய மறுத்ததால், காதலனே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Hyderabad Case: Plea In Supreme Court Against Cops Involved In Telangana  Rape Accused Killing


மனாஜிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீசைலம் கடந்த 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் படிக்கச் சென்றபோது, ​​கேட்டடன்  என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த சாய் பிரியா (19) என்பவருடன் நட்பு  ஏற்பட்டது.  இந்த அறிமுக நட்பு  இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதுகுறித்து  இருவரும் தங்களின் பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு கொண்டனர்.  அதற்கு சாய் பிரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை ஸ்ரீசைலத்தை திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை என்று கூறிய சாய் பிரியாவின் குடும்பத்தினர் இனிமேல் அவருடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதை ஸ்ரீசைலத்திடம் கூறிய சாய் பிரியா இனிப்பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஸ்ரீசைலம் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த வாரம்  ஸ்ரீசைலம் மீண்டும் சாய் பிரியாவிடம் போனில் பேசி இருவரும் தனியாக பேசுவோம் என்று  மஹ்பூப் நகர் மாவட்டம், பூத்பூருக்கு வருமாறு கூறினார்.  இதனால் சாய் பிரியா இம்மாதம் 5ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு பூத்பூர் சென்று ஸ்ரீசைலத்திற்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீசைலம் பைக்கில் பூட்பூருக்கு சென்று சாய் பிரியாவை அழைத்து சென்றார்.  இரண்டு நாட்களாகியும் மகள் வீடு திரும்பாததால் சாய் பிரியாவின் குடும்பத்தினர் மயிலார் தேவர் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிய நிலையில் சாய் பிரியாவின் பெற்றோர் ஸ்ரீசைலம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். 

இதனால் இம்மாதம் 7ம் தேதி இரவு மானாஜிப்பேட்டை கிராமத்திற்கு சென்ற போலீசார், சாய் பிரியா குறித்து ஸ்ரீசைலத்திடம் கேட்டனர். முதலில் தனக்கு தெரியாது என்று கூறிய ஸ்ரீசைலம் போலீசார் தங்களின் பாணியில் விசாரணை நடத்தியதில்  கடந்த 5ம் தேதி பூத்பூருக்கு வந்த சாய் பிரியாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முசாபேட்டா மண்டலம் கந்துரு கிராமம் அருகே இருந்து மானாஜிப்பேட்டை மப்புகுட்டாவுக்கு சென்றதாக தெரிவித்தார். அப்போது மீண்டும் ஒருமுறை சாய் பிரியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டபோது அவர் மறுத்ததால் கோபமடைந்து  கட்டாயப்படுத்தி பாலியியல் பலாத்காரம் செய்து அவரது சல்வார் சுன்னியை எடுத்து தொண்டையில் இருக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.இதை தனது உறவினர் சிவாவிடம் கூறி பின்னர் அன்றிரவே இருவரும் சேர்ந்து  சடலத்தை எடுத்து கொண்டு கே.எல்.ஐ. கால்வாய் அருகே பள்ளம் தோண்டி புதைத்ததாக தெரிவித்தார்.

மேலும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க சாய்பிரியா செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு ஏற்கனவே ஸ்ரீசைலத்தை காதலித்தேன் நீங்கள் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை எனவே தற்போது வேறு ஒருவரை காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்ய ஹைதராபாத் செல்கிறேன். தன்னை தேட வேண்டும் என்று வாட்ச் ஆப்பில் ஸ்ரீசைலன் அனுப்பி விட்டு போனை கால்வாயில் வீசியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வருவாய்  அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய சடலத்தை ஹைதராபாத் கொண்டு சென்றனர். ஸ்ரீசைலம் அவரது உறவினர் சிவாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம் கூட்டு பாலமுரு மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.