கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற மனைவி

 
சொ

 கணவரையும் அவரது காதலியையும் நிர்வாணமாக்கி , கைகளை பின்னால் மூங்கில் மரக்கிளையில் கட்டி, ஊர்வலமாக அழைத்துச் சென்ற மனைவியின் செயல் கொண்டாகன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   இந்த சம்பவத்தை அந்தப் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலனுடன் ஓடும் பெண்களைப் பிடித்து வந்து வினோதமான தண்டனை கொடுப்பது வட மாநிலங்களில் வழக்கமாக இருக்கிறது. அதாவது காதலனை தனது தோளில் சுமந்து கொண்டு நெடுந்தூரம் ஓடவேண்டும்.   அப்படி ஓடும்போது குச்சியை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை அடிப்பார்கள்.  இப்படி வட மாநிலங்களில் அதிகம் நடந்து வருகிறது. 

ப்ல்

 பெண்களை அரை நிர்வாணப்படுத்தி சில இடங்களில் முழு நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கொடுமையும் நடக்கிறது.  காதலனுடன் ஓடும் பெண்களையும்,  கள்ளக்காதலனுடன் ஓடும் பெண்களையும் பிடித்து தலையை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வழக்கம் இருக்கிறது.  வேறு சாதி நபர்களை விரும்பிய காரணத்தால் பெண்களை , ஆண்களை மரத்தில் கட்டி வைத்து,  தலைகீழாக கட்டிவைத்து அடித்து உதைப்பதும் நடக்கிறது.

 இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   அம்மாநிலத்தில் கொண்டாகன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த ஆண் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்து வந்திருக்கிறார்.   இதை அறிந்த அவரின் மனைவி கிராம பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்.   கிராம பஞ்சாயத்தில் கணவரையும் கணவனையும் கள்ளக்காதலியையும் நிறுத்தி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

  அப்போது பஞ்சாயத்தின் முடிவின்படி அந்தப் பெண்ணின் கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்வது என்று முடிவாகியிருக்கிறது.  அதன்படியே கணவரையும் அந்த பெண்ணையும் நிர்வாணமாக்கி கைகளை பின்னால் மூங்கில் மரக்கிளையில் கட்டி மனைவியே முன்னின்று ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த கணவரின் மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.