இடையூறாக இருந்த கணவனை கொன்று செப்டிக் டேங்கில் அடைத்து வைத்த மனைவி

 
d

 கள்ளக்காதலுடன் உல்லாச உறவை தொடர்வதற்கு இடையூறாக இருந்த கணவனை மதுவில் போதை மாத்திரைகள் கலந்து கொடுத்து  நன்றாக மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்துக் கொன்று சாக்கடையில் உள்ள கால்வாய் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்திருந்தார் மனைவி.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் கௌதம் புத்த நகர் பகுதியில்  கழிவு நீர் சாக்கடை நீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.   போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது தான் அது சதீஷ் பால் என்பது தெரிய வந்திருக்கிறது.

j

 இதை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.   சதீஷ் மனைவியிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்திய போது அப்பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார்.  இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து இருக்கிறது.  இதன் பின்னர் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய போது தான்,  தனக்கும் ஹெர்பால் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி இருக்கிறார்.  மேலும்,  தங்களின் உல்லாச உறவுக்கு சதீஷ் தடையாக இருந்ததால் மதுவில் போதை மாத்திரை கலந்து மயங்கவைத்து, கழுத்தை நெரித்து கொன்று சாக்கடைக்குள் போட்டு விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள்.

 கடந்த ஒன்னாம் தேதி என்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   இந்த சம்பவத்தை அடுத்து சதீஷ் மனைவி நீது, கள்ளக்காதலன் ஹேர்பால் இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.