தங்கள் ரகசியம் கணவனுக்கு தெரிந்து விடுமோ என அஞ்சிய மனைவி கூலிப்படையை ஏவிய கொடூரம்

 
zx

கணவர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் அவர்களின் தம்பி உடன் நெருங்கி பழக  அது கள்ள உறவாக மாறி இருக்கிறது.  மைத்துனருடன் நிரந்தரமாக உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக கூலிப்படையை ஏவி கணவரை போட்டுத் தள்ளி இருக்கிறார் கொடூர மனைவி.

 பீகார் மாநிலத்தில் கோபால்பூர் மாவட்டத்தில் நவ் கட்சியா பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குப்தா.   இவரின் மனைவி ப்ரீத்தி  குப்தா.  இவர்களுடன் பப்பு குப்தாவின் சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

ll

 ஒரே வீட்டில் வசித்து வந்ததால் மைத்துனர் உடன் ப்ரீத்திக்கு கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில்  மைத்துனரிடம் உல்லாசம் அனுபவித்து  வந்திருக்கிறார்.  அப்போது திடீரென்று அந்த சந்தேகம் வந்திருக்கிறது.   தங்கள் ரகசியம் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அஞ்சி இருக்கிறார் பிரீத்தி.  இதனால்  கணவரை தீர்த்து கட்டி விட்டால் இந்த அச்சம் தேவையில்லை என்று நினைத்த அவர் இதற்காக கூலிப்படையை  ஏவியிருக்கிறார். 

இதற்காக 20ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து தன் கணவரை தீர்த்து விடும்படி கூலிப்படை கும்பலிடம்  சொல்லி இருக்கிறார் . அதன்படி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பப்பு குப்தாவை வழிமறித்த கூலிப்படை கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு தப்பியிருக்கிறது. 

jj

 அப்பகுதி மக்கள் இதை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார் வந்தபோது பப்பு குப்தா உயிர் இழந்து சடலமாக கிடந்திருக்கிறார் . பப்புவின் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த போது,  பிரீத்தி குப்தா மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.  இதனால் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் மைத்துனருடன் இருக்கும் கள்ள உறவையும் அதனால் கணவனை கூலிப்படை ஏவி கொன்றதையும் சொல்லி இருக்கிறார்.

அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரையும் மைத்துனரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  மேலும் கூலிப்படை கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர்.