கணவரை விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி காதலனுடன் சிக்கினார்

 
னே

கள்ள உறவுக்கு தடையாக இருந்த கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார் மனைவி.  தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 தெலுங்கானா மாநிலத்தில் கம்பம் பகுதியில் பப்படம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமால்.  அதே பகுதியைச் சேர்ந்த இமாம்பி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் உள்ளார்.  மகளை அண்மையில் தான் ஆந்திராவில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள் .

இதனால் மகளை சந்தித்து விட்டு வர வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆந்திராவிற்கு சென்று இருக்கிறார் இமாம்பி.   இதன் பின்னர் ஜமாலும் மகளை காண வேண்டும் என்று நேற்று காலையில் பைக்கில் சென்று இருக்கிறார் .  வழியில் ஒருவர் லிப்ட் கேட்டு இருக்கிறார்.   ஜமாலும் அவருக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார்.   பைக் சென்று கொண்டிருந்தபோது லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்திருந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த ஊசியை எடுத்து ஜமால் மீது குத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார். 

ம்

 இதில் திடுக்கிட்ட ஜமால் பைக்கை நிறுத்துவதற்குள் மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார்.   இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  மருத்துவமனையில் ஜமாலை பரிசோதித்த மருத்துவர்கள் விஷ ஊசி செலுத்தப்பட்டதால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமாலின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   மருத்துவமனைக்கு வந்த ஜமாலின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

 ஜமாலின் மனைவி இமாம்பியிடம் போலீசார்  துருவித்துருவி விசாரணை நடத்தியதில் இமாம்பிக்கும் மட்கே பள்ளி நாமவரா  என்கிற பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது.   இந்த விவகாரம் ஜமாலுக்கு தெரிய வந்ததும் இருவரையும் கண்டித்து உள்ளார்.

 தங்கள் காதலுக்கு கணவர் ஜமால் இடையூறாக இருக்கிறார் என்று நினைத்த இமாம்பி அவரை கொன்று செய்துவிடலாம் என்று மோகனுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.   இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

 இதை அடுத்து இமாம்பி அவரது கள்ளக்காதலன் மோகன்,  இமாம்பிக்கு விஷ ஊசி கொடுத்த மருத்துவர்,  மருத்துவரின் உதவியாளர் என்று நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.