நான்கு பேருடன் சேர்ந்து கணவரை கொன்று வீசிய மனைவி

 
a

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை நான்கு பேருடன் சேர்ந்து கழுத்தை நெரித்தும் தலையில் அடித்தும் கொன்று  வீசி விட்டு சென்ற மனைவி பிடிபட்டுள்ளார்.  அவருடன் அந்த நான்கு பேரும் பிடிப்பட்டு இருக்கிறார்கள். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் கோண்டலே பந்தன் பாடா கிராமம்.   இக்கிராமத்தில் கடந்த 20 ஆம் தேதி அன்று இரவு 10 மணியளவில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றிருக்கிறது.  சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

m

 பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்த ஆண் கழுத்தை நெரித்து தலையில் கடுமையாக தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்கள்.   

இந்த சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி உட்பட 5 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.   இதனால் அவர்களை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்தது.   மனைவி எவ்வளவோ கண்டித்தும் கணவர் அந்த கள்ளக்காதலை கைவிட மறுத்து வந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த மனைவி தன் கணவனை எப்படியாவது கொன்று தீர்த்து பழியை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நாலு பேரின் உதவியுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்தும் தலையில் கொடூரமாக தாக்கியும் கொலை செய்திருக்கிறார்.   பின்னர் உடலை வீசி எறிந்து சென்றது தெரிய வந்திருக்கிறது.

 இதனால் பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.