கள்ள உறவை துண்டிக்காத மனைவி! கள்ளக்காதலனை வெட்டித்தள்ளிய கணவர்

 
kk

 மகன் மருமகனுடன் சேர்ந்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரின் மகனும் மருமகனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் 120 பிளாக்கில் வசித்து வருபவர் முருகன்(47).   இவரது மனைவி ஷகிலா(40).  இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ll

 இந்தநிலையில் 40 வயதான ஷகிலாவுக்கு அவரின் வீட்டின் அருகே வசித்து வரும் மணிகண்டன் என்ற இருபத்தி எட்டு வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே கள்ள உறவு இருந்து வருகிறது.   இது ஷகிலாவின் கணவர் முருகனுக்கும் , அவரது மகன் வினோத்துக்கு,  மருமகன் அருண்குமாருக்கும் தெரியவந்திருக்கிறது.   இதை பலமுறை கண்டித்து பார்த்திருக்கிறார்கள்.  ஆனால் இருவருமே கேட்கவில்லை.

 இதனால் ஆத்திரம் அடைந்த முருகன்,  மகனையும் மருமகனையும்  அழைத்துக்கொண்டு மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.    முன்னதாக  தான் எடுத்துச்சென்ற கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தி தள்ளிவிட்டு தப்பி ஓடி வந்திருக்கிறார்கள்.  இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் முருகன், வினோத், அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.