செலவுக்கு பணம் கேட்ட மனைவி மூச்சுத்திணறி துடிதுடித்து உயிரிழப்பு

 
ம்m

 செலவுக்கு மனைவி பணம் கேட்டதால் இல்லை என்று கணவர் சொல்ல இதில் கணவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் கணவர்.   மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

பால்கர் மாவட்டத்தில்  நாலசோப்ரா பகுதியைச் சேர்ந்தவர் பாவிக் ரமேஷ்பாய்.   இவரது மனைவி முன்னி.   கணவன் மனைவி இருவருக்கும் ஒரே வயது தான் ஆகிறது. இருவருக்குமே 23 வயது.   கணவன் -மனைவி இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.   இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  கருத்து ஒற்றுமை இல்லாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

ஹ்

 இந்த நிலையில் வழக்கம் போல் நடந்த இவர்களின் சண்டை கொலையில் முடிந்திருக்கிறது.   திடீரென்று கொலை நடந்து விட்டது.  

சம்பவத்தன்று  கணவர் ரமேஷ்பாயிடம் செலவுக்கு பணம் கேட்டு இருக்கிறார் முன்னி.  பணம் தர ரமேஷ் பாய் மறுத்துள்ளார்.  இதனால் எப்போதும் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .   ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற ரமேஷ் பாய்,  மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார்.  அப்போதும் மனைவி கடுமையாக திட்டி இருக்கிறார்.

இதில்  மேலும் மாத்திரத்தில் அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்து உள்ளார்.   இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார் முன்னி.

 தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து முன்னியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  பாவிக் ரமேஷ் பாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.