திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த கணவரால் மனைவி அதிர்ச்சி! கட்டிலில் கிடந்த கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி

 
x

 வெளியே சென்றிருந்த கணவர் திடீரென்று வீட்டிற்குள் வந்து விட்டதால் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் கட்டிலில் கள்ளக்காதலனுடன் இருந்த மனைவி. ஆத்திரத்தில் அந்த வாலிபரை கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கிறார் அப்பெண்ணின் கணவர். 

 விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி விசுவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம்.  இவரின் மனைவி ரூபா.   பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார் ரூபா.  அவர் வேலை பார்த்து வரும் அதே பட்டாசு அலையில் ஓட்டுனராக வேலை செய்து வந்த கருப்பசாமியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ள உறவாக மாறி இருக்கிறது. 

a

 ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.   நேற்று இரவு ரூபாவின் கணவர் பாண்டி செல்வம் வெளியே சென்று விட்டதால் அவர் வேலை விஷயமாக வெகு தூரம் சென்று விட்டார் என்று நினைத்த ரூபா,  கருப்பசாமிக்கு போன் செய்து அழைத்து இருக்கிறார்.  அவர் வந்தவுடன் இருவரும் கட்டிலில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.  

 அப்போது வெளியே சென்றிருந்த பாண்டி செல்வம் எதார்த்தமாக திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.   தன் கண் முன்னே மனைவியுடன் வேறு ஒரு வாலிபர் உல்லாசமாக இருந்ததை பார்த்ததும் ஆத்திரமடைந்த பாண்டி செல்வம்,  வீட்டில் கிடந்த கட்டிலை கட்டையை எடுத்து கட்டிலில் கிடந்த கருப்பசாமியை சரமாரியாக அடித்திருக்கிறார்.

 இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெல்லத்தில் உயிரிழந்திருக்கிறார்.  இதை பார்த்ததும் பாண்டி செல்வம் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.  சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து பாண்டி செல்வத்தை  தேடி வருகின்றனர் போலீசார்.  தன்னை போலீஸ் தேடி வருவது அறிந்த பாண்டி செல்வம் தலைமறைவாக இருந்து வருகிறார்.