பைக்கில் காதலனை கட்டிப்பிடித்து சென்ற மனைவி! கையும் களவுமாக பிடித்துவிட்ட கணவருக்கு நேர்ந்த கதி

 
df

அரியானா மாநிலம் பதேஹாபாத் தோஹானாவைச் சேர்ந்தவர்  சஞ்சய்.   இவர் நிகிதா என்பவரை  திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.  திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில்  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.   இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து தகராறு செய்து வந்துள்ளனர் .

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விகாஸ் என்கிற இளைஞருடன் நிகிதாவுக்கு கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் கள்ள உறவில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.   கொஞ்சம் கொஞ்சமாக சஞ்சய்க்கு சந்தேகம் வந்திருக்கிறது.   இது குறித்து மனைவியிடம் கேட்கும் போதெல்லாம் அவர் இல்லை என்று சமாளித்து  வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.  ஆனாலும் சஞ்சய்க்கு மனைவி மீது சந்தேக நடத்தையில் சந்தேகம் வலுத்து  வந்திருக்கிறது.

fi

 இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி அன்று தமகோரா சாலையில் பைக்கில் கட்டி அணைத்தபடியே  விகாஸ் உடன் சென்று இருக்கிறார் நிகிதா.  இதை கையும் களவுமாக பிடித்திருக்கிறார் சஞ்சய்.   அப்போது சஞ்சய் சத்தம் போட்டதும் விகாஸ் அவரை தாக்க ஆரம்பித்திருக்கிறார்.   இந்த தாக்குதலில் சஞ்சய் படுகாயம் அடைந்து கீழே மயங்கி விழுந்திருக்கிறார்.   அப்போது அவரின் மனைவி நிதிதாகவும் கள்ளக்காதலன் விகாஷும் சேர்ந்து சஞ்சய்யின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.  

 பின்னர் சடலத்தை அங்கிருந்த அப்புறப்படுத்த  கால்வாயில் போட்டு புதைப்பதற்காக தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.   ஆனால் அங்கே மக்கள் நடமாட்டம் இருந்ததால் சஞ்சய்யை சிலர் அடித்து கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடி சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாக சொல்லி இருக்கிறார்கள்.  இதற்குள் விவரம் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுடன் பைக்கில் சென்று கொண்டிருந்ததை கணவர் பார்த்து விட்டதால் பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்து விட்டதாக சொல்ல போலீசார் விகாஸ் மற்றும் நிகிதாவை கைது செய்துள்ளனர்.