நான் அந்த எம்.பியுடன் இருந்த வீடியோ - முதல்வருக்கு வந்த இளம்பெண்ணின் கண்ணீர் கடிதம்

 
ம்ப்

என்னை பலமுறை எம்பிக்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்.   இரவு விருந்து வைத்து என்னிடம் உல்லாசமாக இருந்து வந்தார்.   நான் அவருடன்  தங்கியிருந்த வீடியோவை வெளியிட்டியதால் என்னை சிறையில் தள்ளிவிட்டார்.  என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டு இப்போது என்னை ஏமாற்றுகிறார். நீங்கள்தான் நல்ல முடிவை சொல்ல வேண்டும்  என்று எம்பி மீது நடவடிக்கை கோரி முதல்வரின் இளம்பெண் அளித்துள்ள புகார்,  மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது .

சிவசேனா எம்பி ராகுல் செவாலே மீது துபாய் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து  மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  

ர

 முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அப்பெண் எழுதி இருக்கும் கடிதத்தில்,   ’’உங்கள் கட்சியின் எம். பி. ராகுல் செவாலே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார்.  என்னை பலமுறை டெல்லியில் இருக்கும் எம்பிக்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று என்னுடன் உறவு வைத்திருக்கிறார்.   நான் துபாயிலிருந்து டெல்லி வரும்போது எல்லாம் என்னை இரவு  விருந்துக்கு அழைத்து என்னுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

என்னை அவர் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்கிற சந்தேகம் வந்தபோது,  என் உறவை உறுதிப்படுத்திக்கொள்ள  நான் அவருடன் தங்கி இருந்த வீடியோ ஒன்றை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டேன்.  இதனால் என் மீது அவர் சார்ஜா போலீசில் புகார் கொடுத்தார்.  அந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டு 78 நாட்கள் சிறையில் இருந்தேன்.   தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.   என்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று  சொல்கிறார்.  மோசடி செய்து விட்டார்.   இதனால் மும்பையில் உள்ள சகி நாகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.  ஆனால் அவருக்கு இருக்கும் அரசியல்  செல்வாக்கினால் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்கள்.   நீங்கள் தான் எனக்கு நீதி வழங்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார்.

 சிவசேனா  எம்.பி ராகுல் செவாலே இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.    ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் அந்த பெண் தன் மீது அவதூறாக புகார் கொடுத்து தன்னை மிரட்டி பணம் பறிக்கிறார் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்  என்கிறார்.  அவர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.   அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது .  அந்தப் பெண் தனது தொழிலுக்கு நிதி உதவி கேட்டு  என்னை அணுகினார்.  ஆனால் இறுதியில் என் மீது அவதூறு குற்றச்சாட்டு கூறி என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விட்டார்.  நான் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்திக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

யார் சொல்வதில் உண்மை இருக்கிறது? என்று மகாராஷ்டிரா அரசியலில் பெரும் விவாதமே போய்க்கொண்டிருக்கிறது.