தோழியுடன் தனிமையில் இருந்த புதரில் பதுங்கியிருந்த புலி -அடுத்து நடந்த பயங்கரம்

 
g

 தோழியுடன் காட்டுக்குள் தனிமையில் இருந்த போது அங்கே புதர் பகுதியில் பதுங்கி இருந்த புலி திடீரென்று பாய்ந்து வந்ததில் அந்தப் பெண் மட்டும் உயிருடன் தப்பித்து உயிருடன் ஓடி வந்திருக்கிறார்.   இந்த பயங்கர சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது .

க

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹட்சிரோலி மாவட்டம்.   இந் மாவட்டத்தின்  தேசாய்கன்ஞ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் நாகடே. 21 வயதான இந்த இளைஞர் கடந்த மூன்றாம் தேதி அன்று மாலையில் தனது தோழியுடன் பைக்கில் கட்சிரோலி வனப்பகுதியில் சென்று இருக்கிறார்.

 உசேகாவ் வனப்பகுதி அருகே பைக்கில் சென்ற போது அஜித் நாடே பைக்கை நிறுத்திவிட்டு,   தோழியுடன் காட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.  அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று தோழியுடன் தனிமையில் இருந்திருக்கிறார். 

ட்

அவருடைய கெட்ட நேரம் அங்கே  புதர் பகுதியில் புலி பதுங்கி இருந்திருக்கிறது.  பதுங்கி இருந்த புலி பாய்ந்து வந்திருக்கிறது.   பாய்ந்து வந்த புலி அஜித் நாகடே மீது பாய்ந்து தாக்கி இருக்கிறது.   அவரை தாக்கி காட்டுக்குள் புதர் பகுதிக்குள் இழுத்துச் சென்று இருக்கிறது. 

 இதைக் கண்டு கதறி துடித்த அஜித் நாகடேவின் தோழி அங்கிருந்து தலை தெறிக்க தப்பித்து ஓடி வந்து அருகில் உள்ள கிராம மக்களிடம் சொல்லி இருக்கிறார் . அவர்கள் வனத்துறையினருக்கு புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.   உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பா

ட்ர்த்தனர்.

 அங்கே அஜீத் நாகடேவை சடலாமத்தான் மீட்க முடிந்தது.    புலி தாக்குதலில் அஜித் நாகடே உடல் சடலமாக கிடந்திருக்கிறது.  அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

கட்

 அப்பகுதியில் இருக்கும் புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ட்க்

 தோழியுடன் காட்டுக்குள் தனிமையில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த  பயங்கரம் கட்சிரோலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.