மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த ஆசிரியர்

 
ff

தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருக்கிறார் ஆசிரியர்.  ஒடிசா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம் .

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டம். அம் மாவட்டத்தில் பரின்கியா என்கிற பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தயானதிட்சனா  என்பவரிடம் டியூஷன் படித்து வந்திருக்கிறார்.   டியூஷன் படிக்க வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் அந்த ஆசிரியர்.

 இதனால் பயந்து போன அந்த மாணவி,  அந்த  டியூஷனுக்கு போவதை நிறுத்தி இருக்கிறார்.   இந்த நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றிருக்கிறார்.  அப்போது தயான திட்சினா மாணவியை வழி மறித்திருக்கிறார். 

fff

 அப்பொழுதும் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார்.  அதற்கு அந்த மாணவி மறுக்கவும் , அங்கே மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மாணவியின் தலையில் ஊற்றி இருக்கிறார் .  இதில் அந்த மாணவி உடல் முழுவதும் எண்ணெய் பரவி அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்கிறார்.  

திடீரென்று அந்த ஆசிரியர் தீ வைக்கவும்,   மாணவி அலறி துடித்து எரிந்து உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தயானதிட்சனாவை கைது செய்து செயல் அளித்திருக்கிறார்கள் .

பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஒரு மாணவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் தீவைத்து எரித்துக்கொன்ற டியூசன் ஆசிரியரின் செயல் பரின்கிரியா பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.