அங்கங்களை குறிப்பிட்டு பேசும் ஆசிரியை - பிளேடால் கிழித்துக்கொண்ட மாணவிகள்

 
ப்

அந்தத் தமிழ் ஆசிரியைக்கு மாணவிகளின் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாசமாக பேசுவது வழக்கமாக இருந்திருக்கிறது .   இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.   மன உளைச்சல் அதிகமாகி சில மாணவிகள் தங்கள் கைகளை பிளேடால் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  விவகாரம் முற்றியதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.  பள்ளியை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  கல்வி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

ம்ம்ம்

 திருச்சியை அடுத்த மணப்பாறைக்கு அருகே உள்ளது புத்தாநத்தம் கிராமம்.   இக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகிறார்கள்.   மணப்பாறையை சேர்ந்த ஆசிரியை மெகபூபா, இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியராக இருந்து வந்திருக்கிறார் . அவர் தமிழ் பாட வகுப்பின் போது மாணவிகளின் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாசமாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.  

 இதனால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.   இந்த மன உளைச்சல் அதிகமாகி சில மாணவிகள் தங்களின் கைகளில் பிளேடால் கிழித்து கொண்டிருக்கிறார்கள்.  இதன் பின்னர்தான் அந்த ஆசிரியை நடவடிக்கை குறித்து விவரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.  இதனால் கொதித்து எழுந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

 விவரம் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் வந்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.  காவல்துறை அதிகாரிகளும் நேரில் வந்து பெற்றோரிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட வைத்து அனுப்பி இருக்கிறார்கள் .  ஆனாலும் பள்ளியைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.