சக மாணவிகளை அனுப்பிவிட்டு ஒரு மாணவியை மட்டும் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்

 
g

டியூஷன் படிக்க வந்த மாணவிகளில் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு ஒரு மாணவியை மட்டும் இருக்கச் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியர்.   எல்லா மாணவிகளும் போனதும் அந்த மனைவியை பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   நிலைமையை புரிந்து கொண்ட அந்த சிறுமி அதிர்ச்சி அழுது கொண்டே ஓடி இருக்கிறார்.   மீண்டும் ஒரு நாள் அதேபோல் செய்து பாலியல் சில்மிஷம் செய்ததில் அந்த சிறுமி அழுது கொண்டே ஓடியதும் பெற்றோர் கவனித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்திராபூர் என்கிற பகுதிக்கு அருகே உள்ளது பல்லாப்பூர்.   இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 55 வயது உடைய ஒருவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.   பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார் . அவரிடம் 13 வயது சிறுமி டியூசனுக்கு சென்று வந்திருக்கிறார்.  

l

 சம்பவத்தன்று எல்லா மாணவிகளையும் வீட்டுக்கு அனுப்பிய அந்த ஆசிரியர் இந்த 13 வயது சிறுமியை மட்டும் இருக்கச் சொல்லி இருக்கிறார்.  பின்னர் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.   இதை புரிந்து கொண்ட அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வரவும் ,  சிறுமிக்கு விவரம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த ஆசிரியர்,  இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். 

 சிறுமி யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்து டியூசனுக்கு வரவும் , அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்று இருக்கிறார்.   இதில் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று இருக்கிறார் .    விவரத்தை கேள்விப்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவும் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.