மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்து கொன்ற மகன்

 
ஃப்

மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை ஈவு இரக்கமில்லாமல் துன்புறுத்தி தீ வைத்து எரித்து கொலை செய்திருக்கிறார் மகன்.  நெல்லை மாநகரில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம் .

நெல்லை மாவட்டம் கீழநத்தம் ஊராட்சியில் வசித்து வந்தவர் அரசம்மாள்.   70 வயதான இவரின் மகன் அண்ணாமலை.  அண்ணாமலைக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவி உள்ளார்.    மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்திருக்கிறார் அரசம்மாள்.

ar

அனிதாவுக்கும் அரசம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்று வீட்டில் ஏணிப்படிக்கு கீழே விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சடலகமாக கருகி கிடந்திருக்கிறார்.    சம்பவ குறித்து அறிந்த நெல்லை தாலுகா போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 அரசம்மாளின் மகன் அண்ணாமலையிடம் போலீசார் விசாரித்த போது,  குடும்ப பிரச்சனையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.   மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்  என்றால் எதற்காக விறகுகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.   மேலும்,   தீக்குளிக்கும் போது அஅலறி துடிப்பார்கள்.  ஆனால் அலறல் சத்தம் எதுவும் அக்கம் பக்கத்தில்  கேட்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

அச்

 இதனால் அண்ணாமலை சொல்லுவது பொய் என்று  போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.   அவரிடம் மேலும்  விசாரணை நடத்திய போது தான்,  மனைவி அனிதாவுடன் சேர்ந்து தாயை  தீ வைத்து எரித்து கொன்றதை ஒப்புக் கொண்டு இருக்ககிறார்.

 மகனே கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் பெற்ற தாயை மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.