பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

 
f

கேரள மாநிலத்தில் திருச்சூர் அருகே உள்ள செம்மனூரில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி.   75 வயது மூதாட்டியான இவரின் மகன் மனோஜ்.   மது போதைக்கு அடிமையான மனோஜ் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு வளர்ப்பதோடு,  மது வாங்க தாயிடம் பணம் கேட்டு தகராறு வளர்ப்பதையும் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

 கடந்த செவ்வாய் கிழமை அன்று தாயிடம் மது வாங்க பணம் கேட்டிருக்கிறார்.  குடித்தே சொத்தை அளிக்கிறேன் என்று தாய் ஸ்ரீமதி ஆத்திரமாக திட்டி இருக்கிறார். அப்படியும் பணம் கேட்டு எச்சரித்திருக்கிறார் மனோஜ்.    இதற்கு மேலும் என்னால் கொடுக்க முடியாது என்று ஸ்ரீமதி திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார்.  இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ்,  பெற்ற தாய் என்று கூட நினைக்காமல் கடுமையாக தாக்கி இருக்கிறார்.  

ff

 இதற்கு மேலும் பணம் கொடுக்க முடியாது என்று சொன்ன நீ இதற்கு மேலும் உயிருடன்  இருக்க கூடாது அர்த்தம் இல்லை என்று சொல்லி அருகில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து தாயின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து இருக்கிறார்.     உயிருடன் தீ வைத்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.    பற்றி எரிந்ததும் எரிச்சல் தாங்க முடியாமல் கதறிய ஸ்ரீமதியின் மூதாட்டி ஸ்ரீமதி சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நெருப்பை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை நேரில் வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து மூதாட்டி இடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்.   வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீமதி மகன் மனோஜ்ஜை கைது செய்துள்ளனர்.  மது அருந்த பணம் கொடுக்கவில்லை என்பதற்காக பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த பிரித்து கொலை செய்ய முயற்சித்த மகனின் செயல் செம்மனூர் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.