தாயை மரக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் - மதுவாங்க பணம் தராததால் ஆத்திரம்

 
ப்

மது வாங்க பணம் தரவில்லை என்பதற்காக பெற்ற தாயை மரக்கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் மகன். உத்திரபிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

உத்திர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள  சம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு தேவேந்திர ஷைனி என்கிற 25 வயது வாலிபர்,  தன் தாய் சமுந்திரா தேவியிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டிருக்கிறார். 

ட்

 மதுப்பழக்கத்திற்கு அடிமையான தன் மகன்  இரவிலும் மது குடிக்க ணம் கேட்டதால்  ஆத்திரமடைந்த தாயார் பணம் தர மறுத்திருக்கிறார்.   இதில் அந்த தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.   வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மகன் ஷைனி மரக்கட்டை எடுத்து தாயாரை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

 இதில் சம்பவ இடத்திலேயே  அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.   சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து சமுந்திரா தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  அதன் பின்னர் சைனி சகோதரர் ஜெயராம் கொடுத்த புகாரின் பேரில் சைனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

 மது வாங்க பணம் கொடுக்கவில்லை என்பதற்காக பெற்ற தாயை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனின் செயல் பிஜ்னோர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.