திருமணம் செய்து வைக்காததால் தந்தையை வெட்டி கொன்ற மகன்

 
அ

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார் மகன்.    திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி பகுதியில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்த குபேரப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சகாதேவன்.  இவரது மனைவி அன்னக்கிளி.   இத்தம்பதிக்கு மணிகண்டன்,   சக்திவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.  

 இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.   இரண்டாவது மகன் சக்திவேலுக்கு குபேரப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நிச்சயம் பேசி திருமணம் நடந்துள்ளது .  ஆனால் திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றுள்ளார்கள்.  இதன் பின்னர் விவகாரத்து செய்து விட்டனர். 

க்க்

 அதன் பின்னர் விவகாரத்துக்கு ஆன பெண்ணுக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடந்து விட்டது.   அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று மன வேதனை அடைந்த சக்திவேல்,  தனக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் தந்தை சகாதேவனுக்கும் சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 தாய் அன்னக்கிளியிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.   இதில் பெற்றோர்களுக்கும் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் அறிவாளை எடுத்து தந்தை சகாதேவனை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.   இதில் அதிர்ச்சி அடைந்த தாய் அன்னக்கிளி,  அண்ணன் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்ற போது அதை எல்லாம் மீறி சக்திவேல் தந்தையை சரமாரியாக வெட்டியிருக்கிறார்.  இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்திருக்கிறார்.

 அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சகாதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   கொலை வழக்கு பதிவு செய்து தந்தையை கொன்று விட்டு  தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்துள்ளனர்.