இளைஞர்களுடன் சேர்ந்து அண்ணனை கழுத்தை நெரித்து கொன்ற தங்கை

 
ன்

 இளைஞர்களுடன் சேர்ந்து கூடப்பிறந்த அண்ணனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடிய தங்கையின் செயல் குடகு மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டம்  சுந்தர நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 35 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.  இவர் கடந்த இருபத்தி எட்டாம் தேதி அன்று திடீரென்று இறந்து விட்டதாக அவரது தங்கை பவ்யா  உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

 இதையடுத்து உறவினர்களும் நண்பர்களும் திரண்டு வந்து சுந்தர நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுரேஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். சுரேஷ் நண்பர் அஞ்சலி செலுத்த சென்ற போது சுரேஷின் கழுத்துப் பகுதியில் சில காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   உடனே அது குறித்து அங்கு யாரிடமும் பேசாமல் தனது நண்பர் சுரேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக  குஷால் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அர்

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   சுரேஷின் மரணத்தை மர்ம வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 இதற்கிடையில் சுரேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசார் கைக்கு கிடைத்திருக்கிறது.  அதில் சுரேஷ் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.  இதையடுத்து போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.   அப்போது சுரேஷின் தங்கை பவ்யா மீது குடும்பத்தினருகு  சந்தேகம் எழுந்திருக்கிறது.

 இதை அடுத்து  சுரேஷின் தங்கை பவ்யாவிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.   அப்போதுதான் இந்த திடுக்கிடும் தகவலை சொல்லி இருக்கிறார்.

 கடந்த 19ஆம் தேதி சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சாப்பிட்ட மயங்கி விழுந்து விட்டார்.  அதன்பின்னர் உறவினர் ஹரீசை உதவிக்கு அழைத்தேன்.  அவருடைய நண்பர் ஜனதா காலனியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்த மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு,  நான் எல்லோருக்கும் போன் செய்து , அண்ணன் திடீரென்று இறந்து விட்டான் என்று சொல்லி நம்ப வைத்தேன் என சொல்லியிருக்கிறார்.

 கூடப்பிறந்த தங்கையையே அண்ணனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தது உறவினர்கள் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பாவ்யாவுடன் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹரீஷ்,  மகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.