மாணவியை நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்ற பாட்டு வாத்தியார்

 
g

தன்னிடம் பாட்டு கற்றுக் கொள்ள வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும்  விருந்தாக்க முயன்ற பாட்டு வாத்தியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருகிறார் அந்த சிறுமி.  16 வயதான அந்த சிறுமி பட்டாபிராமில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் .  பள்ளி முடிந்து மாலை நேரத்தில் அப்பகுதியில் உள்ள பாட்டு வாத்தியாரிடம் சென்று பாட்டு கற்று வந்திருக்கிறார். 

 பாட்டு சொல்லிக் கொடுக்கும் அந்த  பாட்டு வாத்தியார் அந்த சிறுமியை காதலிப்பதாக அடிக்கடி ஆசை வார்த்தை கூறி வந்திருக்கிறார்.   சிறுமி தனக்கு விருப்பமில்லை என்று எத்தனையோ முறை சொல்லியும் கூட அடிக்கடி ஆசிரியர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை சொல்லி வந்திருக்கிறார்.  திடீரென்று ஒரு நாள் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

s

 அதை அந்த சிறுமிக்கு தெரியாமலேயே போட்டோ வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறார்.   பின்னர் இதை காட்டியே அடிக்கடி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் அந்த போட்டோவையும் வீடியோக்களையும் காட்டி மிரட்டி தனது நண்பர்களின் ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.   

 அதற்கு சம்மதிக்கவில்லை என்றதும் அந்த வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.  இதனால் பயந்து போன சிறுமி பாட்டு வகுப்புக்கு  செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.   அப்படி இருந்தும் கூட அந்த பாட்டு வாத்தியார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி அழுது இருக்கிறார்.  அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரத்தை சொல்லி இருக்கிறார்கள்.   போலீசார் அந்த பாட்டு வாத்தியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து கைது செய்துள்ளனர்.  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.