முதலிரவு அறைக்குள் பால் சொம்புடன் போன புதுப்பெண் அலறல் - கட்டிலில் கணவர் கிடந்த கோலம்

 
மி

காதல் கணவர் தன்னை கட்டிப்பிடித்து கொஞ்சுவார் என்ற கனவுகளுடன் முதல் இரவு அறைக்குள் பால் சொம்புவுடன் போன புதுப் பெண் கட்டிலில் கணவர் கிடந்த கோலத்தைப் பார்த்து அலறி இருக்கிறார்.  அவரின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள்.   ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 ஹைதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் துளசி பிரசாத்.   இவர் ஐடி ஊழியரான சிரிஷா என்கிற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.  இருவரும் நெருக்கமாக காதலித்து வந்தாலும் இரு வீட்டாரும்  அவ்வளவு எளிதில் இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை .  பின்னர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அன்றுதான் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.

ப்

 திருமணத்திற்கு மறுநாள் மண்டன பள்ளியில்  புதுமணத் தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு நடந்து இருக்கிறது.    மணமகன் பிரசாத் முன்னதாகவே முதலிரவு அறைக்குள் சென்றிருக்கிறார்.  முதலிரவு அறையில் துளசி பிரசாத் காத்திருப்பார் என்று ஆசையுடன் பால் சொம்புடன் புதுப்பெண் சிரிஷா முதலிரவு அறைக்குள் சென்றிருக்கிறார். அங்கே கட்டிலில் கணவன் கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்,

 கணவர் மயங்கி கிடக்கிறாரா?  இல்லை தூங்குகிறாரா? என்ற சந்தேகத்தில் அவரை தட்டி எழுப்பி இருக்கிறார்.  பலமுறை சத்தம் போட்டு தட்டி எழுப்பியும் பிரசாத் கண் விழிக்காததால் அதிர்ச்சியில் அலறி இருக்கிறார்.   அவரின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் அறைக்குள் ஓடி வந்திருக்கிறார்கள்.   அங்கே துளசி பிரசாத் பேச்சு மூச்சு இன்றி கட்டிலில் கிடந்திருக்கிறார்.

 இதை அடுத்து உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அங்கு துளசி பிரசாத்தை  பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.  

 காதல் கணவர் முதலிரவு அன்றே இறந்த செய்தி கேட்டு கதறி அழுதிருக்கிறார் சிரிஷா.   இதன் பின்னர் துளசி பிரசாத்தின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

 சம்பவம் குறித்து அறிந்த மண்டன பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  திடீர் மாரடைப்பு காரணமாக துளசி பிரசாத் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.