பள்ளியின் மொட்டைமாடிக்கு சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த தாளாளர் மகன்

 
df

மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து,  பிஸ்கட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் பள்ளியின் தாளாளர் மகன்.  ஒன்பது வயது சிறுமியை பள்ளி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தற்போது சிக்கியிருக்கிறார்.

 தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் சந்தோச நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பள்ளியின் தாளாளர் மகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

bn

இதற்காக அவர் மாணவிகளுக்கு சாக்லேட் , பிஸ்கட் வாங்கி கொடுத்து ஆசை வார்த்தை சொல்லி பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.   இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுமியை பள்ளியின் தாளாளர் மகன் யாசிர் பள்ளியின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் .

உங்கள் வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் இந்த செயலைச் சொல்லி அழுது இருக்கிறார் அந்தச் சிறுமி . இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.   அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.  சிறுமியின் புகாரை அடுத்து  மேலும் பல மாணவிகள் தங்களுக்கு பாலியல் செய்கின்ற இடம் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்து வருகிறார்கள். இதனால் விவகாரம் பெரிதாவை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.