நகையை தர மறுத்ததால் மனைவி கண்முன்னே கணவனை கொன்ற வழிப்பறி கொள்ளையர்கள்

 
murder

ஆந்திராவில் புதுமண தம்பதியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி நகைகளை பறிக்க முயன்ற மர்ம நபர்கள், நகைகளை தரமறுத்ததால் மனைவியின் கண்முன்னே கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32-yr-old Murdered Over 500 In Vizag | Visakhapatnam News - Times of India

ஆந்திர மாநிலம்  சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலம் நெக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த ரெட்டப்பா மகன் தாமு (25). இவர் தனது மனைவி அனுராதா (23), உடன் மாமியார் வீட்டுக்குச் சென்று பைக்கில் மீண்டும் நெக்குண்டி நோக்கி சென்று கொண்டுருந்தார். அப்போது தூர்லப்பள்ளி அருகே கொத்தகுண்டவம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத 3 பேர் அங்கு வந்து கத்தியை காட்டி  நகைகளை தரும்படி மிரட்டியுள்ளனர். ஆனால் தாமு   நகைகளை தரவேண்டாம் என சத்தம் போட்டதால்  கொள்ளையர்கள் கத்தியால் தாமுவை  கண்மூடிதனமாக தாக்கியதில் தாமு சம்பவ இடத்திலேயே  இறந்தார். 

அனுராதா சத்தம் போட்டு கொண்டு ஓடியதால் சுற்றி பகுதி கிராம மக்கள் திரண்டனர். இதனால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில் அனுராதா  வீட்டிற்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனையடுத்து அனுராதா உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் கொலையாளிகள் ஏற்கனவே தப்பி ஓடிய நிலையில் தகவல் அறிந்த புங்குனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கங்கிரெட்டி  தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தாமுவுக்கும் அனுராதாவுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்த நிலையில்   கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் தாமு இறந்ததால் குடும்பத்தினர் கதறி  அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.