காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலிக்கு காதலன் கொடுத்த தண்டனை

 
r

காதலித்து விட்டு ஏமாற்றியதால் இளம்பெண்ணை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா(வயது26).   இவர் பெலகாவியில் இருக்கும் ராணி சென்னம்மா பல்கலைழ் கழகத்தில் படித்து வந்திருக்கிறார்.  இதேபோல் புதிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(வயது28).  பெலகாவியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

பெலகாவி டவுனில் உள்ள பசவ நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் ரேணுகா.  அப்போது ரேணுகாவுக்கும் ராமச்சந்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி இருக்கிறது.  இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

r

 இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராமச்சந்திராவுடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார் ரேணுகா . இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரா ரேணுகாவிடம் பின் தொடர்ந்து  சென்றபோது நான் உன்னை காதலிக்கவில்லை  என்று சொல்லி இருக்கிறார்.  இதில் மேலும் ஆத்திரம் அடைந்திருக்கிறார் ராமச்சந்திரா.  இதனால் தன்னை ஏமாற்றிய ரேணுகா உயிருடன் இருக்கக்கூடாது என்று ஆத்திரம் கொண்டிருக்கிறார்.

 இதனால் ராமச்சந்திரா இரவு நேரத்தில் ரேணுகா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.   அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாகி இருக்கிறது.   அப்போது வீட்டில் கிடந்த கயிறை எடுத்து ரேணுகாவின் கழுத்தை சுற்றி  இறுக்கியிருக்கிறார் ராமச்சந்திரா.  இதில்  மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறார்.

 இறந்து போன ரேணுகாவின் உடலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரா அதே இடத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பேரின் உடல்களையும் நேற்று பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

காதலித்து ஏமாற்றியதால் காதலியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.