தனிமையில் இருந்தபோது பெவிக்குவிக்கை ஊற்றி.. கள்ளக்காதல் ஜோடியை கொன்ற சாமியார்

எந்த சூழலிலும் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த சூழலில் இப்போது இருவரும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று சாமியார் வலியுறுத்த, அதைக் கேட்டு அந்த கள்ளக் காதல் ஜோடியும் உல்லாசமாக இருந்த போது, இருவரையும் பெவிக் குவிக் ஊற்றி ஒட்டுக்கொள்ளச் செய்து, பின்னர் கத்தி, கற்கள் கொண்டு இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார் சாமியார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மஜாவாட் கிராமத்தில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் நிர்வாணமாக கிடந்திருக்கின்றன . அதில் ஆணின் அந்தரங்க பகுதி வெட்டப்பட்டு இருந்திருக்கிறது. இளம் பெண்ணின் அந்தரங்க பகுதியில் காயம் இருந்திருக்கிறது. இது கௌரவ கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சாமியார் பாலேஸ் குமார் சிக்கி இருக்கிறார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் ஜோடியை தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் .
திருமண வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது குறித்து சாமியார் பாலேஸ் குமாரிடம் வந்து புலம்பிச் சென்றிருக்கிறார் சோனி சிங். அதே போல் வாலிபர் ராகுல் மீனாவும் திருமண வாழ்க்கை பிரச்சனையால் சாமியாரிடம் வந்து சென்றிருக்கிறார். அப்போது சோனு சிங்குக்கும் ராகுல் மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.
இதை அடுத்து இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ராகுல் மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் சாமியாரிடம் வந்து முறையிட்டு இருக்கிறார். தன் தொழிலுக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்று இருவரையும் பிரிந்து விடச் சொல்லி கேட்டு இருக்கிறார். ஆனால் கள்ளக்காதல் ஜோடி பிரிய மறுத்துள்ளனர். இதனால் இதுவரையும் கொன்று விட திட்டமிட்ட சாமியார் பெவிக் குவிக் வாங்கி வந்து வைத்திருந்தார்.
பின்னர் ராகுல் -சோனுவை அழைத்து எந்த சூழலிலும் நீங்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த சூழலில் இருவரும் உல்லாசமாக இருக்க வேண்டும் சொல்ல, அதை நம்பிய இருவரும் உல்லாசமாக இருக்க, அப்போது இருவரையும் பிரிக்க பெவிக்குவிக் ஊற்றியதால் பிரிய முடியாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து கத்தி, கற்கள் கொண்டு இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.