மிட்டாய் தர்றேன்னு சொல்லிட்டு அந்த தாத்தா..சிறுவனின் அழுகையால் பெற்றோர் அதிர்ச்சி

 
xd

 மிட்டாய் தரேன்னு சொல்லிட்டு அந்த தாத்தா என்னை அப்படி பண்ணிட்டார் என்று சொல்லி சிறுவன் அழுவதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளிக்கவும் முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 கோவையில் வசித்து வரும் குப்புசாமி என்கிற 63 வயது முதியவர்,  தனது வீட்டின் அருகே மூன்றாவது படித்து வரும் 8 வயது சிறுவனிடம் பாசமாக பழகி இருக்கிறார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனிடம் விட்டாய்  தருகிறேன் என்று  சொல்லி வீட்டிற்குள் அழைத்திருக்கிறார்.    தாத்தா பாசமாக மிட்டாய் தருகிறார் என்று நினைத்து அந்த சிறுவனும் ஆசையாக வீட்டிற்குள் சென்றிருக்கிறான்.

si

 வீட்டுக்கு சென்ற சிறுவனுக்கு ஒரே அதிர்ச்சி.   அங்கே குப்புசாமி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.   இதில் பயந்து போன சிறுவன் அழுது கொண்டு வீட்டிற்கு ஓடியிருக்கிறான்.   மகன் அழுது கொண்டே வருவதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து,   அவனிடம் விசாரித்து இருக்கிறார்கள்.

 அப்போதுதான்,   மிட்டார் தர்றேன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்ட  அந்த தாத்தா அப்படி நடந்துகிட்டார் என்று சொல்லி அழுதிருக்கிறான்.   இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர் செட்டிபாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

 போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து குப்புசாமியை  நிலைத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள் .  அங்கு நடந்த விசாரணையில்,  இந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல்,  இன்னொரு  எட்டு வயது சிறுவனுக்கு,  பாலியல் தொல்லை கொடுத்தது  தெரியவந்திருக்கிறது.  

 தொடர்ந்து முதியவர் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்ததால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் போலீசார். மேலும் வேறு ஏதும் சிறுவர்கள்  முதியவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.