மருமகள் கொடுமை.. மாமனார், மாமியார் எடுத்த விபரீத முடிவு -உயிருக்கு போராடிய நிலையில் விலாசம் எழுதிய முதியவர்

 
su

மருமகள் கொடுமையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் மாமனார்.  அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தபோது பேப்பர், பேனா வாங்கி அதில் தன் பெயரையும் தன் மனைவி பெயரையும் தங்களின் ஊரின் பெயரையும் எழுதி கொடுத்து இருந்த கொடுத்திருக்கிறார்  அந்த முதியவர்.  நெல்லையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியை சேர்ந்த தம்பதிகள் அந்தோணி பிச்சை(65)-  ஜெயலட்சுமி(60).  இத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.   இந்த நிலையில் அந்தோணி பிச்சையும் ஜெயலட்சுயும் நெல்லை மாவட்டத்தில் ஓரியில் இருக்கும் அந்தோனியார் கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.  

w

 உவரி அந்தோனியார் ஆலயத்தில் எதிர்புறம் இருக்கும் பேரறிஞர் அண்ணா பேருந்து பயணிகள் நிழல் கூடத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தார்கள்.   அப்போது திடீரென்று அந்தோணி பிச்சை தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து இருக்கிறார்.  இதில் ஜெயலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

 பின்னர் தானும் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கிறார் அந்தோணி பிச்சை .  இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து அவர் துடிதுடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்த  மக்கள் போலீசுக்கு தகவல் சொல்ல போலீசார்  வந்து போது,   ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அந்தோணிசாமி பேப்பர் பேனா வாங்கி அதில் தனது பெயர் தனது மனைவி பெயர் சிவகாசி முனீஸ்வரன் காலனி என்று தங்களது ஊரின் பெயரையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

 ஜெயலட்சுமியின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்,   உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அந்தோணி பிச்சை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வள்ளியூர் போலீசார்  முதற்கட்ட விசாரணையில் மருமகள் கொடுமை  காரணமாக மாமனாரும்,  மாமியாரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.   மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.