குழந்தை பிறந்ததுமே ஜன்னல் வழியாக தூக்கி வீசி கொன்ற தாய்

 
c

யாருக்கும் தெரியாமல் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசியிருக்கிறார் அந்த தாய்.  அடுக்குமாடியில் குடியிருந்த அந்த பெண் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசியதை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

மும்பையில் நவிமும்பை உவ்வே பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நவிமும்பை உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் இருந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை கிடந்திருக்கிறது.   இதை பார்த்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ll

 போலீசார் விரைந்து வந்த அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடும்பத்தினர் ஒவ்வொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது,  இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஜன்னல் கம்பி இல்லாததை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.  போலீசார் அந்த வீட்டில் விசாரித்த போது தான் அந்த வீட்டில் உள்ள இளம் பெண் தான் இந்த சம்பவத்தை செய்தது தெரிய வந்திருக்கிறது.

 இளம் பெண்ணுக்கு உறவினரோடு உறவு ஏற்பட்டு அவர்கள் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார்.  கர்ப்பம் அடைந்து எட்டு மாதம் ஆனபோதும் கூட வயிறு பெரிதாக இல்லாததால் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருக்கிறார் அந்த இளம் பெண்.   ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.

 இரவு நேரத்தில் திடீரென்று வயிற்று  வலி அதிகமாக இருந்ததால் கழிவறைக்கு சென்று இருக்கிறார்  அப்போது கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். பின்னர் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி எறிந்து இருக்கிறார் .  இந்த விவரங்கள் தெரிய வந்ததும்,  போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் .

யாருக்கும் தெரியாமல் குழந்தையை கழிவறையில் பெற்று எடுத்து ஜன்னல் வழியாக வீசி எறிந்து கொன்ற அந்த பெண்ணின் செயல் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.