மகனின் பாலியல் தொல்லை தாங்காமல் மூக்கு, வாயை பொத்தி மூச்சை அடக்கிய தாய்

 
b

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வாலிபர் மதுபோதையில் பெற்ற தாய்க்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மகனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் உறவினர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து மூச்சை அடக்கி  கொலை செய்திருக்கிறார்.   தற்கொலை என்று ஊரார் முன்பு நாடகம் ஆடினாலும் சந்தேகத்தில் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் காமயகவுண்டன்பட்டி சாலையில் வசித்து வந்தவர் கனகமணி . 62 வயதான இந்த பெண்மணியுடன் அவரது மகன் வேல்முருகனும்(36) வசித்து வந்திருக்கிறார் .  வேல்முருகன் திருமணமானவர்.  கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அருமையான வேல்முருகனை அவரது மனைவி ரோஜா பிரிந்த சென்று விட்டார். இதனால் தாயார் கனகமணியுடன் வசித்து வந்திருக்கிறார் வேல்முருகன்.

ப்ப்

 கஞ்சா,  மது போதையில் வாழ்ந்து வந்த வேல்முருகன் பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.  மகளின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த தாய் கனகமணி,  தன் சகோதரர்கள் கண்ணன் மற்றும் சகோதரி கணவர் கருப்பையாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார்.   அவர்களும் வேல்முருகனை கண்டித்து பார்த்து இருக்கிறார்கள்.   ஆனால் அவர் கேட்கவே இல்லை. 

 மகனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் மீண்டும் உறவினர்களிடம் கனகமணி கண்ணீர் வடிக்க,  பெற்ற பிள்ளை என்று கூட பார்க்க கூடாது இனிமேல் திருத்துவதற்கு வாய்ப்பு இல்லை அதனால் கொன்று விடுவது தான் நல்லது என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அதன்படி மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த வேல்முருகனை கண்ணன், குமார் கனகமணி மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்திருக்கிறார்கள்.

ஜ்

  மூக்கை பிடித்து மூச்சை நிறுத்தி இருக்கிறார்கள் அதன் பின்னர் ஊராரிடம் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மதிக்கிறார்கள் இதன் பின்னர் இறுதிச் சடங்கு வேலைகளும் நடந்து இருக்கின்றார்கள்.  இறுதிச் சடங்குகள் முடிந்து மின் மயானத்திற்காக வேல்முருகன் உடலை கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அப்போது திடீரென்று போலீஸ்காரர் குறுக்கிட்டு,   அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கம்பம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.  அதன் பின்னர் வேல்முருகனின் தாயார் கனக மணியிடம் துருவித்துருவி போலீச் விசாரணை நடத்தியது.

 பெற்ற தாய் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கு வேல்முருகனுக்கு மது போதை பழக்கம் இருந்தது.  எவ்வளவு செல்லியும் திருத்த முடியாததால் வேறு வழி என்று கொலை செய்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.  இதை அடுத்து போலீசார் கனகமணி. கண்ணன் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 பெற்ற தாய்க்கு மது போதையில் பாலியல் தொல்லை போல கொடுத்து வந்த மகன்   படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது