தாயை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்தவர் பாட்டியை கொல்ல முயன்றபோது பிடிபட்டார்

 
ம்mய்

 சொத்து தகராறில் தாயை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்து வந்த இளைஞர் அதே சொத்து தகராறில் பாட்டியை கொலை செய்ய முயன்ற போது போலீசில் பிடி பட்டிருக்கிறார்.   கிருஷ்ணகிரியில் தாயை கொன்று விட்டு சென்னையில் பாட்டியை கொல்ல முயன்றபோது சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

 சென்னை அரும்பாக்கத்தில் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் மங்கையர்கரசி(வயது57).  இவர் தனியாக வசித்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று அவரது பேரன் சதீஷ்குமார்(வயத்28) திடீரென்று வீட்டிற்கு வந்திருக்கிறார்.   சொத்தை விற்று பணத்தை கொடு என்று பாட்டியிடம் தகராறு செய்திருக்கிறார் .  அப்படி செய்யவில்லை என்றால் தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட மங்கையர்க்கரசி,  சதீஷ்குமாருக்கு தெரியாமல் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

ர்ர்

 விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரை பிடித்துவிட்டனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் அதிர்ந்து போனார்கள்.  அவர் மீது ஏற்கனவே கொலைவழக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதே சொத்து தகராறில் தாயை கட்டையால் அடித்துக் கொன்று விட்டு அந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்,  பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததும்  அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றி வந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

 உடனே சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 சொத்து தகராறில் தாயை கிருஷ்ணகிரியில் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த இளைஞர்,  சென்னையில்  சொத்தை விற்க சொல்லி தனது பாட்டியையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.