ரெண்டு காதலன்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால் கிணற்றில் குதித்த காதலி

 
ல்

ஒரே நேரத்தில் இரண்டு காதலன்களும் சேர்ந்து வந்து நின்று கொண்டு இரண்டு பேரில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று மிரட்டி கேட்க,  அதிர்ந்து போன இளம் பெண் பதில் சொல்ல முடியாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்திருக்கிறார்.மத்திய பிரதேச மாநிலத்தில் பெடல் மாவட்டம்.  அம்மாவட்டத்தில் போர்தேஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

 இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.   பின்னர்  அவரை பிடிக்காமல் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் . அதன் பின்னர் வேறு ஒரு இளைஞருடன்  பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து அவருடன் சுற்றி வந்திருக்கிறார் .  இதை கண்டு முன்னாள் காதலன் கடும் ஆத்திரமடைந்திருக்கிறார்.

வ்

 அந்த இளைஞர் பெண்ணின் புது காதலனிடம் சென்று தன்னை பற்றி எடுத்துச் சொல்லி தான் பெண்ணுடன் பழகியதை எல்லாம் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதனால் இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.   இரண்டு பேரில் யாரை உண்மையாக காதலிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள இருவரும் முடிவு எடுத்துள்ளனர்.   அதன்படி இரண்டு இளைஞர்களும் தங்களின் நண்பர்களை கூட்டிக்கொண்டு கையில் கம்பு, ஆயுதத்துடன் அந்த பெண்ணை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

 இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த இளம் பெண் அதிர்ச்சியில் நின்று இருக்கிறார் .  அப்போது இரண்டு பேரில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று சொல் என்று கேட்டிருக்கிறார்கள்.  அதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த இளம்பெண் திகைத்து நின்று இருக்கிறார்.   அதனால் இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை அடித்து தாக்கி இருக்கிறார்கள். 

 அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி இருக்கிறார் .  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதை பார்த்து பதறிப் போய் இருக்கிறார்கள்.  அந்த பெண் வேறு வழியில்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிச்சென்று கிணற்றில் குதித்திருக்கிறார்.   இதை பார்த்ததும் பதறிப்போய் காதலர்கள் தப்பி ஓடி இருக்கிறார்கள்.   அங்கிருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து பெண்ணை மீட்டிருக்கிறார்கள்.

 அந்த இளைஞர்களில் இரண்டு பேரை மட்டும் அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் .  அதன் பின்னர் அப்பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரின் பேரில் காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.