ரெட்டம்மாவின் வீட்டிற்குள் தெருநாய்கள் சென்று வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி! கள்ளக்காதலனுடன் தனிவீடு எடுத்து வசித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
re

 கணவனை விட்டு பிரிந்து தனியாக வீடு எடுத்து கள்ளக்காதலுடன் உல்லாசம் அனுபவித்து வந்த பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று இருக்கிறார் கணவர்.

 சித்தூர் மாவட்டத்தில் பாக்கார பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.    அதே பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டம்மா.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.    இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் . அந்த எதிர்ப்பை எல்லாம் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.   

 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த ஸ்ரீகாந்த் -ரெட்டம்மா தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார்.   திருமணமாகி சில ஆண்டுகள் வரைக்கும் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதிகள்  அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.   ஸ்ரீகாந்தை ரெட்டம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் போயிருக்கிறது.   இந்த நிலையில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் ரெட்டம்மாவுக்கு கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.

re

 இதனால் ஸ்ரீகாந்த் -ரெட்டம்மா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  இதை அடுத்து ரெட்டம்மா கணவரையும் மகனையும் பிரிந்து சென்று தனியாக வீடு எடுத்து கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

  ரெட்டமாவும் கள்ளக்காதலனும் தனிவீடு எடுத்து உல்லாசமாக இருப்பதாக ஸ்ரீகாந்துக்கு தகவல் வந்திருக்கிறது.   அவர் மனைவி ரிட்டம்மாவை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.   அதன்படி சம்பவத்தன்று ரெட்டம்மா வீட்டிற்கு சென்று அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.   எதற்காக தனியாக வாழ்கிறாய் என்று சண்டை போட்டுள்ளார்.   இதில் இருவரும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது,   தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவி ரெட்டம்மாவின் கழுத்தை அறுத்திருக்கிறார்.  

  இதில் ரெட்டம்மா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.  தெரு நாய்கள் வீட்டிற்குள் அடிக்கடி சென்று வெளியே வந்துள்ளது.  தெருநாய்கள் வீட்டிற்குள் சென்று விட்டு வெளியே வருவதை பார்க்க அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கொண்டு வீட்டிற்குள் போய் பார்த்து இருக்கிறார்கள் .  அங்கே ரெட்டம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்.   உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் போலீசார் விரைந்து வந்து ரெட்டம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  அதன் பின்னர் கணவர் ஸ்ரீகாந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்து  தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர்.