மறைவான இடத்தில் அலங்கோலமான நிலையில் அழுதுகொண்டிருந்த சிறுமி

 
cx

மறைவான இடத்தில் அலங்கோல நிலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த சிறுமியை மீட்டு  சிறுமியின் அந்த நிலைக்கு காரணம்  டெம்போ டிரைவர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.   அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை காட்கோபர். இப் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 26ஆம் தேதியன்று மாலையில் ஒரு மறைவான இடத்தில் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.   அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து இருக்கிறார்கள்.   அச்சிறுமியைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் . அதனால் சிறுமியிடம் எதுவும் பேசாமல் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

r

 இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு உள்ளனர்.   சிறுமி மிகவும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்ததால் அவருக்கு சமாதானம் சொல்லி தைரியம் சொல்லி முதலில் சிறுமியை ஆசுவாசப் படுத்தி இருக்கிறார்கள் .   பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்தபோது ஒரு அங்கிள் சாக்லேட் தருவதாக சொல்லி இந்த இடத்திற்கு கூட்டி வந்தார் என்று அந்த சிறுமி சொன்னதை வைத்து... யாரோ சிறுமியை ஏமாற்றி கூட்டிவந்து பாலியல் வன்கொடுமை செய்து சென்றது போலீசார் தெரிந்து கொண்டனர் .

இதையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில்  வாலிபர் ஒருவர் சிறுமியை அழைத்து வருவது தெரிந்தது   போலீசார் விசாரணையில் அவர் சச்சின் சாமா என்பது தெரியவந்தது.    35 வயதான அந்த வாலிபர் டெம்போ டிரைவர் என்பது தெரியவந்திருக்கிறது .  இதையடுத்து போலீசார் 24 மணி நேரத்தில்  விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை கைது செய்துள்ளனர்.  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் போலீசார்.