காதல் மனைவியை சரமாரி வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த கணவர்

 
kk

காதல் மனைவியை மூன்றே மாதங்களில் திருமணம் ஆன மூன்று மாதங்களில் சரமாரி வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்து உள்ளார் கணவர்.   சென்னையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி.  இவர் புளியந்தோப்பு சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த குரங்கு பிரசாத் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.   குரங்கு பிரசாத் மீது  ஏழு கிணறு,  ஐசிஎப், நொளம்பூர், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசாந்தை திருமணம் செய்து உள்ளார் தமிழ்ச்செல்வி.   திருமணத்திற்கு பின்னர் வியாசர்பாடி எம். எம். கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.   மூன்று மாதம் நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் மனைவியின் மீது திடீரென்று சந்தேகம் வந்திருக்கிறது.

b

 மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார் பிரசாந்த்.   நேற்று முன்தினம் இரவும் 11 மணிக்கு போதையில் வந்த பிரசாத் மனைவியிடம் சந்தேகப்பட்டு தகராறு செய்திருக்கிறார்.   அப்போது தமிழ்ச்செல்வி கண்டபடி தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாத்,  கத்தியை எடுத்து தலை, இடுப்பு, கை என்று மனைவியை சரமாரியாக குத்தி இருக்கிறார்.   இதில் தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து இருக்கிறார்.

 அப்போது தமிழ்செல்வியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.   தமிழ் செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 மனைவியை கொன்று விட்டதாக நினைத்து தப்பி ஓடி பதுங்கி இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.