மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசிய கணவர்

 
sk

தன்னை விட்டு பிரிந்து சென்று ஐந்து வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசி விட்டு தப்பி ஓடி இருக்கிறார் கணவர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பத்தினம் திட்டாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  ஏழாம் குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வித்தியா என்கிற பெண்ணுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது.  ஒரு வருடம் மட்டுமே இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  அந்த ஒரு வருடத்திற்கு உள்ளேயே கணவன் மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   இதன் பின்னர் வித்தியா கணவனை விட்டு பிரிந்து சென்று கடந்த ஐந்து வருடங்களாக தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.   இருவரும் விவகாரத்தை கோரியும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

 இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வித்தியாவின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார் சந்தோஷ்.  ஐந்து வருடங்களுக்கு பின்னர் திடீரென்று கணவர் தன் முன் வந்து நிற்பதை பார்த்து வித்தியா கடும் அதிர்ச்சியில் இருந்து இருக்கிறார்.

sa

அந்த அதிர்சியில் இருந்து வித்யா மீள்வதற்குள் அவரை கடுமையாக அடித்து உதைத்து இருக்கிறார்.  அடிபட்ட வித்தியா வலியால் துடித்து கொண்டிருந்தபோது,  தான் கொண்டு சென்றிருந்த பட்டா கத்தியை  எடுத்து வித்தியாவின் இரண்டு கைகளையும் வெட்டி இருக்கிறார்.  ஒரு கையை மணிக்கட்டு வரைக்கும் வெட்டி இருக்கிறார். இன்னொரு கையை முழங்கை வரைக்கும் துண்டாக வெட்டி இருக்கிறார்.  

இது கொடூரம் போதாது என்று வித்தியாவின் தலை முடியை வெட்டி இருக்கிறார்.  தலையிலும் அவர் வெட்டி வெட்டியதால் காயங்கள் உள்ளன.  அப்போது தன் மகள் வித்தியாவை காப்பாற்ற அவரின் தந்தை விஜயன் போராடி இருக்கிறார்.  அவரையும் கடுமையாக தாக்கி விட்டு சந்தோஷ் தப்பி ஓடி இருக்கிறார்.

 வித்தியா, அவரது தந்தை விஜயன் இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.   சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்ததபோது,  சந்தோஷை  சம்பவத்திற்கு முன்பாக அந்த பகுதியில் பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.  இதன் மூலம் முன்கூட்டியே சந்தோஷ் திட்டமிட்டு  மனைவியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்திருக்கிறார் என்பது தெரிய வந்த வந்தது. 

 இதை அடுத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சந்தோஷ் செல்போன் நம்பரை வைத்து,  பல்வேறு காவல் நிலையங்களில் உதவியுடன் செல்போன் சிக்னலையும் வைத்து அவரை கைது செய்துள்ளார்கள் போலீசார்.