கள்ளக்காதலனை கொன்றுவிட்டால் மனைவி தன்னிடம் வந்துவிடுவாள் என்று விபரீத முடிவு எடுத்த கணவர்

 
k

தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து செல்ல அவரின் கள்ளக்காதலன் தான் காரணம் என்பதை எண்ணி ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.  இதை அடுத்து கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

 சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி அடுத்த பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு.   இந்த பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவர் தறி தொழிலாளி.  இவரின் மனைவி மல்லிகா.  மல்லிகாவுக்கும் மாணிக்கத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மல்லிகா கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகரில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

 ஆட்டையாம்பட்டி அடுத்த எஸ். பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் முருகேசன் என்பவருக்கும் மல்லிகாவுக்கு இடையே கள்ளக்காதல் இருந்திருக்கிறது. இந்த விவகாரம் மாணிக்கத்திற்கு தெரிய வந்ததும்,  இதனால்தான் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாளா என்று ஆத்திரமடைந்திருக்கிறார்.  இதை அடுத்து மாணிக்கம் முருகேசனை சந்தித்து கண்டித்து இருக்கிறார்.  அதன் பின்னரும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.

ஜ்

 இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம்,  முருகேசனை எப்படியாவது கொன்று விட்டால்,  தன் மனைவி மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்து விடுவாள் என்று நினைத்திருக்கிறார்.  

 சம்பவத்தன்று முருகேசன் நைனா பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார்  முருகேசன்.  அப்போது எதிரே வந்த மாணிக்கம் முருகேசனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.   ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணிக்கம் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து முருகேசன் தலையில் வெட்டி இருக்கிறார்.   இதை பார்த்து ஓடி வந்த பொதுமக்கள் முருகேகசனை மீட்டு சேலம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.   அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 சம்பவம் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.   பின்னர் அவரை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.