தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவர்

 
pp

தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை இரண்டு நாட்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். 

 சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா.   28 வயதான  இளம் பெண் கருத்து வேறுபாட்டினால் கணவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாய் வீடான புழல் கதிர்வேடு பகுதியில் சென்று தாய் வீட்டிற்குச் சென்று வசித்து  வந்திருக்கிறார்.   அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற 35 வயது வாலிபருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  

raja

 இதன் பின்னர் பவித்ராவும் , ராஜாவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெரியபாளையம் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதன் பின்னர் விழுப்புரத்திற்கு சென்று அங்கே துணிக்கடையில் இருவரும் வேலை செய்து வந்திருக்கிறார்கள்.    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கள்ளிக்குப்பத்துக்கு வந்து அங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். 

 ஒரு வாரத்திற்கு மேலாகவே பவித்ராவுக்கும் ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாட்டினால் தொடர்ந்து சண்டை நடந்து வந்திருக்கிறது.  பவித்ராவின் தாய் அமுதா வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.   

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணி அளவில் பவித்ராவின் வீட்டில்  சத்தம் கேட்பதாக சண்டைய நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.  இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்றிருக்கிறார்கள்.  அப்போது பவித்ரா சடலமாக இருந்திருக்கிறார்.  பவித்ராவின் உடலை மீட்ட போலீசார் அவரது கணவர் ராஜாவை தேடி இருக்கிறார்கள்.  அவர் இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.

 இதை எடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து சிக்னலை வைத்து நள்ளிரவில் அம்பத்தூரில் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட ராஜாவிடம் பவித்ராவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.