மனைவியிடம் ஆபாசமாக பேசச் சொல்லி அவரின் வாட்ஸ் அப் எண்ணை நண்பர்களுக்கு கொடுத்த கணவர்

 
ட்

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியை பழிவாங்க அந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார் கணவர்.   அதன்படி மனைவியின் வாட்ஸ் அப் எண்ணை நண்பர்களுக்கு அனுப்பி தன் மனைவியிடம் ஆபாசமாக பேசி ஆபாச புகைப்படங்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துமாறு சொல்லி இருக்கிறார் கணவர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசித்து  வருபவர் ஆகாஷ்.   அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார்.

ச்

 திருமணத்திற்கு பிறகு ஆகாஷ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.  இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   கணவன் ,மனைவிக்கு இடையே நடந்த தகராறு அதிகமாகிப் போகவே மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார் ஆகாஷ் . இதனால் கடும் கோபமடைந்த மனைவி கணவரின் குடும்பத்தினர் மீதும் கணவர் மீதும் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார்.   இதில் மேலும் ஆத்திரமடைந்த ஆகாஷ் தங்கள் குடும்பத்தினர் மீதும் தன் மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும் படி மிரட்டி இருக்கிறார்.

 வாபஸ் வாங்க மாட்டேன் என்று அந்த இளம்பெண் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஆகாஷ்,  மனைவியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.   அதன்படி மனைவியின் வாட்ஸ் அப்  எண்ணை நண்பர்களுக்கு அனுப்பி தன் மனைவியிடம் ஆபாசமாக பேச வேண்டும் , ஆபாச படங்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் .

அதன்படியே அவரது நண்பர்களும் அந்த இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசி ஆபாச புகைப்படங்களை அனுப்பி மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறார்கள் .  இதை அடுத்து மீண்டும் காவல் நிலையம் சென்ற அந்த இளைஞன் கணவரின் கணவரின் நண்பர்களின்  இந்த செயலை  கண்டித்து புகார் கொடுத்துள்ளார். 

 கணவன் மனைவி பிரச்சனையில் கணவரே மனைவியின் செல் போன் என்னை நண்பர்களுக்கு கொடுத்து ஆபாசமாக பேச சொன்ன செயல் கான்பூர் பகுதி மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.