கணவன் உடலை துண்டு துண்டாக வெட்டி..கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்

 
sa

 வெளிநாட்டில் இருந்து கணவன் திரும்பி வந்து விட்டதால் தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்து தனது இரண்டு கள்ளக்காதலன்களை ஏவி விட்டு கணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர மனைவி  அந்தமானுக்கு தப்பும் முயற்சியில் சிக்கியிருக்கிறார்.  ஒரு காதலன் வெளிநாட்டுக்கு தப்பிவிட போலீஸ், ஒரு கள்ளக்காதலன் போலீசில் சிக்கி இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிங்கநேந்தல் பகுதி.   இப்பகுதியில் வசித்து வந்த பிச்சைகனிக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது.  இத்தம்பதிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.   பரோட்டா மாஸ்டர் ஆன பிச்சைக்கனி வெளிநாட்டில் ஓட்டலில் வேலை செய்து வந்திருக்கிறார்.   கடந்த மே மாதம் 25ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்  பிச்சைக்கனி.  சொந்த ஊருக்கு வந்த இரண்டு தினங்களில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

ka

 மே 27ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.  அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.    இதனால் தனது கணவர் பிச்சைக்கனியை காணவில்லை என்று அவரின் மனைவி சாந்தி,  தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிச்சைக்கனி குறித்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.   ஆனால் சாந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.   இதனால் அவருடைய செல்போனை வாங்கி சோதனை செய்து இருக்கிறார்கள்.   அதில் இரண்டு செல்போன் எண்களுக்கு  அதிகம் சாந்தி பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது.  அந்த செல்போன் எண்ணுக்கு உள்ள முகவரியை பார்த்த போது அது பார்த்திபன்,  கலை மோகன் என்ற இருவரின் செல்போன் எண்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 

 விசாரணையில் அவர்கள் இருவரும் சாந்தியின் உறவினர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து கலை மோகனை  பிடித்து போலீஸ் விசாரணை நடத்திய போது,   பார்த்திபனுக்கும் கலைமோகனுக்கும் சாந்தியுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது .  இரண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார் சாந்தி.   இவர்கள் உல்லாசமாக வாழ்வதற்காக வெளிநாட்டிலிருந்து கஷ்டப்பட்டு  சம்பாதித்து அந்த பணத்தை அனுப்பி வந்திருக்கிறார் பிச்சைக் கனி.

s

 வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பி விட்டதால் எங்கே தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பாரோ  என்ற எண்ணத்தில் கலை மோகனிடமும், பார்த்திபனிடமும் சாந்தி வருத்தப்பட,  பிச்சைக்கனியை கொன்று விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.   அதன்படி சம்பவத்தன்று பிச்சைக்கனியை மது அருத்தலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று போதை ஏறியதும்  அறிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.  பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி அரசலூர் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் வீசி இருக்கிறார்கள்.

 கலைமோகனை போலீசார் கைது செய்த நிலையில் பார்த்திபனையை கைது செய்ய முயன்ற போதுஅவர் மலேசியாவுக்கு தப்பிப்பது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து பார்த்திபனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விமான நிலையங்களுக்கு தகவல் அளித்து இருக்கிறது காவல்துறை.    சாந்தியை கைது செய்ய தேடி வந்த போது அவர் அந்தமானுக்கு தப்ப முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது.  மதுரை விமான நிலையத்தில் சென்று விரைந்து சாந்தியை கைது செய்துள்ளனர்.