மனைவியை இரண்டு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக புதைத்த கணவர்

 
ax

மனைவியை இரண்டு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக புதைத்திருக்கிறார் கணவர்.  நடத்தையில் சந்தேகம் வந்ததால் காட்டுக்குள் அழைத்துச் சென்று கோடறியால் வெட்டி இந்த சம்பவத்தை செய்திருக்கிறார். 

 மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாதோல்  ஊரில் உள்ள  காட்டுப்பகுதியில் பெண்ணின் ஆடை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது..  இதை அடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் அந்த காட்டுப் பகுதியில் தலை மற்றும் உடல் தனித்தனியே புதைக்கப்பட்டிருந்தது தெரிய கண்டு எடுக்கப்  பட்டிருக்கிறது.

b

அந்த இடத்தில் உடலையும் தலையையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி பட்டேல் என்பது தெரிய வந்திருக்கிறது.   இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சரஸ்வதி பட்டேலுக்கும் அவரது கணவர் ராம்கிஷோர் பட்டேலுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது தெரிய வந்திருக்கிறது .  

இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் சில காலம் இருந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது.   சரஸ்வதி பட்டேலின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தான் 
ராம் கிஷோர் பட்டேல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.  இந்த சந்தேகம் வலுத்து வந்ததை அடுத்து மனைவியை கொன்றுவிட முடிவெடுத்து இருக்கிறார்.

 இதனால் அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று கோடரியால் வெட்டி கொலை செய்திருக்கிறார். பின்னர் தலை மற்றும் உடலை அந்த காட்டிற்குள் வெவ்வேறு இடங்களில் புதைத்திருக்கிறார்.   போலீசில் கைது செய்யப்பட்டிருக்கும் அவரின் இந்த வாக்குமூலம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.