மனைவி தாய்வீட்டிற்கு சென்றுவிட்டதால் அந்தரங்க பகுதியை வெட்டிக்கொண்ட கணவர்

 
a

தாய் வீட்டில் இருந்த மனைவி தன் வீட்டிற்கு வராததால் ஆத்திரத்தில் அந்தரங்க பகுதியை வெட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இளைஞர்.  பீகார் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம். 

 பீகார் மாநிலத்தில் மாதேபுரா அடுத்த ரஜினிநாயகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி.  25 வயதான இந்த இளைஞர் கோல் பரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.   இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.  மூன்று மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

d

 கிருஷ்ணா பாசுகி வேலை நிமித்தமாக பஞ்சாப் மாநிலத்தில் மண்டி பகுதியில் தங்கியிருந்தார்.  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.  கணவர் வெளியூரில் வேலை செய்து வந்ததால் மனைவி அனிதா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.   கணவர் ஊருக்கு வரும்போது மட்டும் அவரது வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். 

 இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா பாஸ்கி சொந்த ஊருக்கு வந்து இருக்கிறார்.    அப்போது மனைவி வீட்டில் இல்லை.  தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றிருக்கும் மனைவிக்கு போன் செய்து வரச் சொல்லி இருக்கிறார்.   அதற்கு அனிதா ,   உடனே வர முடியாது.  சில தினங்களில் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

 இதைக் கேட்டதும்  ஆத்திரமடைந்த இளைஞர் அந்தரங்க உறுப்பை  வெட்டிக் கொண்டிருக்கிறார்.   வெட்டியதும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.   அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா,  தற்போது அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணாவின் மனைவி அனிதா மற்றும் உறவினர்களிடமும்,  அப்பகுதி ஊராரிடமும் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது .  அது உண்மையா என்பது குறித்தும் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.