பூஜைக்கு வரும் பெண்களை லாட்ஜுக்கு அழைத்து செல்லும் கணவன்!மனைவிக்கு நீதி கிடைத்தது

 
xx


பூஜைக்கு வரும் பெண்களை லாட்ஜுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து வந்த கணவரின் செயலை கண்டித்த  மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததால்,   நீதிமன்றத்தில் முறையிட  கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இந்த சிறை தண்டனையை எதிர்த்து கணவர் மேல்முறையீடு செய்ய கீழமை நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை மாநகர இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றம்.

 சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மதுக்கர் துக்கிரில்லா.  இன்ஜினியரான இவரது மனைவி ஷோபா.  1987 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த இத்தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள இருக்கிறார்கள்.   அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த மதுக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டில் சென்னை திரும்பி இருக்கிறார்.  சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் குடியேறி இருக்கிறார்கள் .

pp

சாய்பாபாவின் மீது மதுக்கருக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.  இதனால் வீட்டிலேயே புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு அறக்கட்டளை தொடங்கி பக்தி மார்க்கத்தை வளர்த்து வந்திருக்கிறார் .  இந்த அறக்கட்டளைக்கு பெண்களின் வருகை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.   பூஜைக்கு வரும் பெண்களுடன் தனிமையிலிருந்து வந்துள்ளார். அந்தப் பெண்களை வெளியே அழைத்துச் சென்று லாட்ஜில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

 ஆரம்பத்தில் கணவரின் பக்தி மார்க்கத்தை கண்டு மகிழ்ந்த ஷோபா பின்னர் உண்மை தெரிந்த வந்ததும் இதை கைவிடும் படி கணவரை கண்டித்து இருக்கிறார். ஆனால் மதுக்கர் அதற்கு சம்மதிக்காததால் தொடர்ந்து கணவரிடம் அது குறித்து சண்டை போட மனைவியை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார் மதுக்கர்.   இதனால் கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதுக்கர்  மீது சோபா புகார் அளித்துள்ளார். 

j

 மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடந்து வந்தது.   இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.   அந்த தீர்ப்பில் மதுக்கருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகர 2வது  கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் மதுக்கர். ஆனால், மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார் என்பதற்கான குற்றச்சாட்டுகள் உறுதியானதால் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆறு மாத சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது .