வீட்டு பூஜையில் நடந்த பயங்கரம்! சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய சிறுமி

 
க்

வீட்டில் நடந்த பூஜையில் திடீரென்று ஆவேசமான அந்த சிறுமி  வாளை எடுத்து பூஜையில் இருந்த ஒரு சிறுமியின் தலையை வெட்டி வீசியிருக்கிறார்.  இந்த பயங்கர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது.  

 அம் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் வசித்து வரும் அந்த 15 வயது சிறுமி விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்து இருக்கிறார்.   வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களாகவே அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருந்திருக்கிறது.  ஒரு வித படபடப்புடன் கோபத்துடனே இருந்திருக்கிறார்.

r

சிறுமியின் வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தால் பூஜைக்கு உறவினர்களும் வந்திருக்கிறார்கள்.   பூஜை நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஆவேசமான அந்த சிறுமி அங்கிருந்த பெரிய வாளை எடுத்து எல்லோரையும் வெட்ட முயற்சித்து இருக்கிறார்.   எல்லோரும் இதை கண்டு அலறி துடித்து சிதறி ஓடி இருக்கிறார்கள். அப்போது பக்கத்து அறைக்கு ஓடிய சிறுமி அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது  சொந்தக்கார சிறுமியின் தலையை வெட்டி வீசியிருக்கிறார்.  இதில் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு,  நடந்த கொலை குறித்து விசாரித்துள்ளனர்.   அப்போது பூஜை நடந்ததால் வீட்டில் யாருமே இரண்டு நாட்களாக சாப்பிடவே இல்லை.  இந்த நிலையில் தான் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி வீட்டிற்கு வந்தார்.  இரண்டு நாட்களாகவே யாரிடமும் பேசாமல் படபடப்புடன் ஆத்திரத்துடன் இருந்து  சிறுமி,   பூஜையில் அப்படி நடந்து கொள்வார் என்று யாரும் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.  கொலை குறித்து அந்த சிறுமியிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.