நடுரோட்டில் நடந்த பயங்கரம்! மனைவியையும் அவரது காதலனையும் கழுத்தறுத்து கொன்ற வாலிபர்

 
k

கருத்து வேறுபாட்டினால் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி இன்னொரு ஆணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவதை அறிந்து பாத்திரப்பட்டு மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் நடுரோட்டில் கழுத்தை அறுத்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார் மகாராஷிராவில் நடந்திருக்கிறது இந்த பயங்கர சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கர சம்பவம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷம்ஷாபாத் மாவட்டம்  பீபால்தார் பகுதியில் உள்ள அசோக் கார்டனில் வசித்து வருபவர் சுனில்.  அவரது மனைவி  அருணா பாய்(வயது22).   சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  

சமீப காலமாக இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்திருக்கிறது.   இதன் காரணமாக கணவர் சுனிலை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார் அருணாபாய்.  

kk

 இந்த நிலையில் ராஜேந்திரன் மால்வியா என்கிற நபருடன் அருணாபாய்க்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருக்கிறது.   அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.  அருணா பாய் -ராஜேந்திரன் இருவரும் உறவினரின் ஒருவர் வீட்டின் திருமணத்தில் சந்தித்து இருக்கிறார்கள்.   அப்போது அருணா பாய் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை தெரிந்து கொண்டிருக்கிறார் ராஜேந்திரன் .   அன்று முதல் அடிக்கடி அருணா பாயிடம் பேசி வந்திருக்கிறார்.  இதில் இருவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது .

 இந்த விவரம் எல்லாம் அருணாவின்   கணவர் சுனிலுக்கு தெரிய வந்திருக்கிறது.  இதில் ஆத்திரம் அடைந்த சுனில் மனைவி அருணா பாய் அவரது காதலன் ராஜேந்திரன் இருவரையும் கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.   செம்மராவில் உள்ள கைலாஷ் நகர் என்கிற பகுதியில்தான்  இருவரும் வசித்து வருவது சுனிலுக்கு தெரிய வந்திருக்கிறது.  

 இதை அடுத்து  மூன்று நாட்களாக அருணா பாய் -ராஜேந்திரன் இருவரையும் கொலை செய்ய அவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.  இருவரும் வெளியூரில் வேலை செய்துவிட்டு மாலை நேரம் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள்.  இதை தெரிந்து கொண்ட சுனில் கடந்த திங்கட்கிழமை அன்று கைலாசநாதர் செம்மரா கமல் மாவு மில் அருகே கத்தி மற்றும் கட்டையுடன் காத்திருந்திருக்கிறார்.

 அப்போது அருணா பாய், ராஜேந்திரன் மால்வியா இருவரும் அந்த வழியாக வந்ததும் அவருக்கு தெரியாமலேயே பின் தொடர்ந்து  நடந்து சென்றிருக்கிறார்.   ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அவர்களை திடீரென்று வழிமறித்து கட்டையால் பலமாக தாக்கி இருக்கிறார்.   இதில் அருணா பாயும் ராஜேந்திரனும் மயங்கி கீழே விழுந்து இருக்கிறார்கள்.  அப்போது ராஜேந்திரன் கழுத்தை கத்தியால் அறுத்திருக்கிறார் சுனில் . அதன் பின்னர் வயிற்றில் சரமாரியாக குத்தி இருக்கிறார். அதன் பின்னர் மயங்கி கிடந்த மனைவி அருணா பாயை சரமாரியாக குத்தி படுகொலை செய்திருக்கிறார்.  

பின்னர் அங்கிருந்து மகனுடன் தப்பி ஓடி இருக்கிறார்.  போலீசார் இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி சுனிலை கைது செய்துள்ளனர்.  இந்த படுகொலைக்கு உதவியாக இருந்த சனிலின்  நண்பர் மதன் சிங்கையும் கைது செய்து இருக்கிறார்கள்.