தாத்தாவை கொன்று புதைத்து புற்கள் நட்டு வைத்த பேரன்

 
ப்

நண்பர்களுடன் சேர்ந்து தாத்தாவை அடித்து உதைத்து கொன்று புதைத்து அந்த இடத்தில் சந்தேகம் வராதபடி புற்களை நட்டு வைத்துள்ளார்.  நண்பர்களுக்கு அடிக்கடி வைத்து வந்த மது விருந்தை நிறுத்தி விட்டதால் நண்பர்கள் மற்ற ஊராரிடம் உளறி கொட்டியுள்ளனர்.  இதன் பின்னர் 8 மாதங்களுக்கு பின்னர் தாத்தாவை கொன்ற வழக்கில் பேரன் சிக்கி இருக்கிறார்.

 கர்நாடக மாநிலத்தில்  துமகூரு மாவட்டத்தில் குப்பி தாலுகா கல்லதர்கரே போவி   காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா.   75 வயதான இந்த முதியவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.   கோவிந்தப்பா தனது பெயரில் இருக்கும் சொத்தை மகன் ,மகள் இருவருக்கும் சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறார்.  இதை மகன் வழி பேரன் மோகன்(22) விரும்பாமல் இருந்திருக்கிறார் .

சொத்து முழுவதும் தங்களுக்கே வரவேண்டும் தன் அத்தைக்கு எந்த காரணம் கொண்டும் கொடுக்கக் கூடாது என்று தாத்தாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்.  ஆனால் தாத்தா மகன், மகள் இருவருக்கும் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தந்தைக்கு தெரியாமல் தாத்தாவை பலமுறை கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

ல்

 இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் நண்பர்கள் இரண்டு பேரை உதவிக்கு அழைத்து இரும்பு தடியால் தாத்தாவின் தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார் .   பின்னர் உடலை தூக்கி சென்று நிலத்தில் புதைத்து விட்டு . அதன் மேல் புற்களை நட்டு வைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராத முடிவு புற்களை வைத்து இருந்தார்கள்.  

 கோவிந்தப்பா அடிக்கடி உறவினர்களை சந்திக்க வெளியூர் செல்வது வழக்கம்.   அப்படித்தான் வெளியூர் சென்றிருக்கிறார் என்று அவரது மகனும் மகளும் நினைத்து இருந்திருக்கிறார்கள்.   ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வரவில்லை என்பதால் சேலூர் போலீசில்  புகார் அளித்திருக்கிறார்கள். 

 இதற்கிடையில் கொலைக்கு உதவியதால் நண்பர்களுக்கு அடிக்கடி மது விருந்து வைத்து வந்துள்ள மோகன் மாதங்கள் பல கடந்ததால் நண்பர்களுக்கு வைத்து வந்த மது விருந்தை றுத்தி இருக்கிறார்   மோகன்.   இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மதுபோதையில் மோகன் தாத்தாவை அடித்துக் கொன்றதை சிலரிடம் சொல்லி உளறி இருக்கிறார்கள்.   இந்த தகவல் ஊர் முழுவதும் பரவி இருக்கிறது .  இதன் பின்னர் போலீசுக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது .

போலீசார் மோகனைப் பிடித்து விசாரித்ததும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.   இதை அடுத்து மோகன், நண்பர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர் .  தாத்தாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.   தாத்தாவை கொன்ற வழக்கில் எட்டு மாதத்திற்கு பேரன் சிக்கி இருப்பதும் கோவிந்தப்பா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார் என்ற தகவல்.

 எட்டு மாதத்திற்கு பின்பு ஊராருக்கும் உறவினர்களுக்கும் தெரிய வந்ததை எடுத்து தூமகூரு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.