வர மறுத்ததால் பெண் கட்டையால் அடித்துக் கொலை

 
ll

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை எழுப்பி உல்லாசத்திற்கு  அழைத்த போது வர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.   போலீஸாரின் தீவிர விசாரணையில் மூன்று பேரும் சிக்கி இருக்கிறார்கள். 

 ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா.   57 வயதான இந்த பெண் கட்டிடத் தொழிலாளி.   இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.   பெருந்துறையில் பவானி சாலையில் இருக்கும் வாரச்சந்தை வணிக வளாகப் பகுதியில் இரவு அங்கேயே தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார் சாந்தா.

mmmm

 இந்த நிலையில் கடந்த 1ம் தேதி அன்று இரவு வார சந்தை வளாகத்தில் வழக்கம்போல் தூங்கி இருக்கிறார் சாந்தா.   அதிகாலையில் அங்கு சென்றவர்கள் பார்த்தபோது முகம் தலையில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்.   பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த போது திருவாச்சி விஏஓ அலுவலகத்தில் பெருந்துறை அடுத்த பூவம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல் சரணடைந்துள்ளார்.

 பின்னர் பெருந்துறை போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் அளித்த வாக்குமூலத்தின் படி சித்தம்பட்டி குளத்தில் பதுங்கி இருந்த ஆறுமுகம், கோபி என்ற இருவரும் பிடிபட்டனர். 

 விசாரணையில் இந்த மூன்று பேரும் சேர்ந்து தான் அந்த பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.  கடந்த 1ம் தேதி அன்று இரவில் மூன்று பேரும் மது குடித்துவிட்டு போதையில் சந்தைப்பேட்டைக்குச் சென்று இருக்கிறார்கள்.   அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த சாந்தாவை எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்து இருக்கிறார்கள்.  அவர் வர மறுத்ததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.