சீட்டு விளையாட அழைத்து அழகுகலை நிபுணரை சீரழித்த கும்பல்

 
r


 சீட்டு விளையாட்டில் ஆர்வம் உடைய அழகுக்கலை நிபுணரை சீட்டு விளையாடலாம் என்று அழைத்து மது அருந்த வைத்து  சீரழித்துள்ளது ஒரு கும்பல்.  அதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மற்றொருவரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.  அகமதாபாத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

மும்பையைச் சேர்ந்த 49 வயதான இந்த அழகு கலை நிபுணர் திருமணமானவர்.  கணவருடன் வசித்து வருகிறார்.  அவருக்கு சீட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் இருக்கிறது.  கடந்த ஆறாம் தேதி அன்று பெண்ணின் வீட்டிற்கு அவருக்கு நன்கு அறிமுகமான நண்பர் ஒருவர் வந்து சீட்டு விளையாடி இருக்கிறார்.  

 அப்போது குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு நாள் சீட்டு விளையாட வா.  அங்கு உன்னை போலவே சீட்டு விளையாட்டில் ஆர்வம் கொண்ட என் நண்பர்கள் இருக்கிறார்கள்.    எல்லாருடனும் சேர்ந்து விளையாடலாம் என்று அழைத்திருக்கிறார். 

ra

 விளையாட்டு ஆர்வத்தில் நண்பரின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல்,  நண்பருடன் காரில் புறப்பட்டு அகமதாபாத் சென்றிருக்கிறார்.  நண்பரின் வீட்டிற்கு சென்றதும் அங்கு மேலும் இரண்டு நபர் இருந்திருக்கிறார்கள்.   அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடி இருக்கிறார் அப்பெண்.   அப்போது மதுபானம் அருந்தி இருக்கிறார்கள்.  அந்த பெண்ணும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கிறார்.

 பின்னர் மது போதை அதிகமானதும் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.   அந்த வீடியோவையும் போட்டோவையும் காட்டி இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் இந்த போட்டோவையும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.   இதனால் அவர்களிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மும்பை திருப்பிய அந்தப் பெண்,  தனக்கு நடந்த கொடுமையை கணவனிடம் சொல்லி அழுது இருக்கிறார். 

அதன் பின்னர் கணவனுடன் சென்று வில்லே பார்லே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடிக்க போலீசார் தேடி வந்ததில்,   இரண்டு பேர் சிக்கியிருக்கிறார்கள்.  மேலும் ஒருவரை படிக்க போலீசார் தேடி தனிப்படை அமைத்துள்ளனர்.